Curry Leaves Water: தினமும் 4 இலைகள்.. ஆரோக்கியத்தை அள்ளி தரும் கறிவேப்பிலை தண்ணீர்!

Healthy Morning Drink: சமையலறையில் உள்ள கறிவேப்பிலை சமைக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று பலர் நினைக்கிறார்கள். இருப்பினும், கறிவேப்பிலை அவற்றின் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து என பல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சமையலறைக்கு அப்பால் அவற்றின் சாத்தியமான பயன்பாடுகளை தெரிந்து கொள்வது மிக மிக முக்கியம். 

Curry Leaves Water: தினமும் 4 இலைகள்.. ஆரோக்கியத்தை அள்ளி தரும் கறிவேப்பிலை தண்ணீர்!

கறிவேப்பிலை தண்ணீர்

Published: 

19 Sep 2025 16:43 PM

 IST

வேகமாக ஓடும் இந்த நவீன வாழ்க்கை முறையில் ஒருவர் ஆரோக்கியமாக இருப்பது என்பது மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டது. மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் துரித மற்றும் கொழுப்புள்ள உணவுகள் பிரச்சனைக்குரியதாகி வருகின்றன. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கையை (Healthy Lifestyle) தேடுவதற்காக பலரும் எளிதான தீர்வுகளைத் தேடுகிறார்கள். இருப்பினும், எடை குறைப்பு மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்துவதற்கு எளிதாக கிடைக்கும் கறிவேப்பிலை (Curry leaves) ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். அதன்படி, தினமும் கறிவேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பது உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தீர்க்கும். அந்தவகையில், கறிவேப்பிலை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

உணவை சுவையாக மாற்றும் கறிவேப்பிலை:

சமையலறையில் உள்ள கறிவேப்பிலை சமைக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று பலர் நினைக்கிறார்கள். இருப்பினும், கறிவேப்பிலை அவற்றின் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து என பல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சமையலறைக்கு அப்பால் அவற்றின் சாத்தியமான பயன்பாடுகளை தெரிந்து கொள்வது மிக மிக முக்கியம்.

ALSO READ: மழைக்காலத்தில் அடிக்கடி தொண்டை வலியால் தொல்லையா..? காரணங்களும்.. தீர்வுகளும்..!

கறிவேப்பிலையின் நன்மைகள் என்ன?

முடிக்கு நன்மை:

சிறுவயது முதலே நம் தாத்தா – பாட்டி கறிவேப்பிலை சாப்பிடுவது முடிக்கு மிகவும் நல்லது என்று சொல்லி கேள்வி பட்டிருப்போம். இவற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் தலையில் உள்ள முடி வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்தலைக் குறைக்க உதவி செய்யும்.

சருமத்திற்கு நன்மை:

கறிவேப்பிலையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. இவை சருமத்தில் உள்ள கறைகள் மற்றும் வீக்கத்தைக் குறைக்க பெரிதும் உதவி செய்யும்.

செரிமானத்தை மேம்படுத்தும்:

கறிவேப்பிலை சாப்பிடுவது வயிற்று உப்புசம், மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது .

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு:

கறிவேப்பிலை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை குறைத்து, அதிகரிக்காமல் தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி:

கறிவேப்பிலையில் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும்.

கறிவேப்பிலை தண்ணீர்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீரை குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதன்மூலம், எடை குறைக்க விரும்புவோர் இதை தாராளமாக எடுத்து கொள்ளலாம். இதை எவ்வாறு செய்வது என்று தெரிந்துகொள்ள விரும்புவோர், முதலில் 10 பிரஷான கறிவேப்பிலை இலைகளை எடுத்து நன்கு கழுவி கொள்ளவும். அவற்றை 2 கப் தண்ணீரில் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, தண்ணீரை வடிகட்டி சூடாகவோ அல்லது சற்று குளிராகவோ குடிக்கலாம்.

ALSO READ: சளி, இருமலை உடனடியாக குணப்படுத்தும் அருமருந்து.. வெங்காயத்தை எப்படி பயன்படுத்தி பலன் பெறலாம்?

கறிவேப்பிலை நீரைக் குடிப்பது போன்ற சிறிய வாழ்க்கை முறை மாற்றங்கள் நீண்டகால நன்மைகளைத் தரும். இது எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒரு இயற்கை பானமாகும். நீங்கள் தினசரி வாழ்க்கையில் கறிவேப்பிலை நீரைச் சேர்க்க வேண்டும்.