கல்லீரை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமா? இந்த 6 உணவுகள் தவிருங்கள் !
Liver Health Warning : கல்லீரல் உடலில் மிக முக்கியமான உறுப்பு. ஆனால் கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகள் உடனடியாக தெரியாது. அது தீவிரமடையும் போது தான் அதன் அறிகுறிகள் நமக்கு தெரிய ஆரம்பிக்கும். எனவே அவற்றை முறையாக பராமரிப்பது மிகவும் அவசியம். இந்த கட்டுரையில் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு தவிர்க்க வேண்டிய 6 உணவுகள் குறித்து பார்க்கலாம்.

கல்லீரல் (Liver) நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இது இரத்தத்தை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் நச்சு நீக்கம் போன்ற பல முக்கிய செயல்பாடுகளையும் செய்கிறது. ஆனால் இன்றைய வாழ்க்கை முறையாலும், மோசமான உணவுப் பழக்கத்தின் (Food Habits) காரணமாகவும் நாம் அறியாமலேயே நம் கல்லீரலுக்கு தீங்கு விளைவித்து வருகிறோம். பொதுவாக கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகள் வெளிப்படையாக தெரியாது. தீவிர நோயாக மாறிய பிறகே கல்லீரலில் பிரச்னை இருப்பதே நமக்கு அது குறித்து தெரிய வரும். எனவே கல்லீரல் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இந்த கட்டுரையில் கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிக்க தவிர்க்க வேண்டிய உணவுப் பழக்கங்கள் குறித்து பார்க்கலாம்.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்
- சமோசாக்கள், பக்கோடாக்கள், பிரஞ்சு ஃபிரைஸ் அல்லது சிப்ஸ் போன்ற வறுத்த உணவுகளில் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது. இதனால் கல்லீரல் கொழுப்பு படிகிறது. இது மது அல்லாத ஃபேட்டி லிவர் நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த உணவுகள் கல்லீரல் வீக்கம் மற்றும் பலவீனத்திற்கு வழிவகுக்கும்.
இதையும் படிக்க : மழைக்காலத்தில் காலையில் எழுந்ததும் தொண்டை வலியா..? இதை செய்தால் சரியாகும்!
- ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி போன்ற இறைச்சிகளில் புரதம் அதிகமாக உள்ளது, ஆனால் கல்லீரலால் அவற்றை ஜீரணிப்பது கடினம். இறைச்சி இன்னும் அதிக பிரச்சனையை ஏற்படுத்தும், குறிப்பாக உங்களுக்கு ஏற்கனவே கல்லீரல் பிரச்னைகள் இருந்தால், இவ்வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- குளிர்பானங்கள், கடைகளில் விற்கும் பழச்சாறுகள் அல்லது சுவையூட்டப்பட்ட எனர்ஜி பானங்களில் அதிக அளவு பிரக்டோஸ் உள்ளது. இவை கல்லீரலில் கொழுப்பைச் சேர்த்து படிப்படியாக சேதப்படுத்தும். தினமும் இனிப்பு பானங்கள் குடிப்பதால் ஃபேட்டி லிவர் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
- பீட்சா, பர்கர்கள், இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை கல்லீரலின் இயற்கையான செயல்பாட்டை சீர்குலைக்கின்றன. அவை கல்லீரல் வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
இதையும் படிக்க : சாப்பிட்ட பின் செய்யக்கூடாத தவறுகள்: ஆரோக்கியத்தை பாதுகாக்க அறிய வேண்டியவை!
- தொடர்ந்து குறைவான அளவில் மது அருந்துவது கூட கல்லீரல் செல்களை சேதப்படுத்தும். அதிகமாக மது அருந்துவது கல்லீரல் சிரோசிஸ் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும். எனவே, மதுவை வரம்பிற்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
- உணவில் உப்பு அவசியம். ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது கல்லீரலில் நீர் தேக்கம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். ஜங்க் ஃபுட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக உப்பு உள்ளது. இது கல்லீரலுக்கு படிப்படியாக சேதத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் இந்த உணவுகளிலிருந்து விலகி இருப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.