Breastfeeding Mistakes: தாய்ப்பால் கொடுக்கும்போது தாய் செய்யும் தவறுகள்.. ஏன் இதை தவிர்க்க வேண்டும்? மருத்துவர் ஹரிணி ஸ்ரீ விளக்கம்!
Breastfeeding Mistakes of Mothers: வாழ்க்கையின் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் அவசியம். இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. புதிதாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய 4 பொதுவான தவறுகளை டாக்டர் ஹரிணி ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ஹரிணி ஸ்ரீ
தாய்ப்பால் (Breastfeeding) கொடுப்பது உங்கள் குழந்தைக்கு சிறந்த உணவாகும், மேலும் தாய்-சேய் பிணைப்பை பலப்படுத்துகிறது. இருப்பினும், சில நேரங்களில், சிறிய தவறுகள் உங்கள் குழந்தை அதிலிருந்து முழுமையாகப் பயனடைவதைத் தடுக்கலாம். இது அவர்களின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கும். குழந்தையின் தேவைக்கேற்ப தாய்ப்பால் மாறுகிறது. வாழ்க்கையின் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் அவசியம். இது தாய் மற்றும் குழந்தை (Child – Mother) இருவருக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. புதிதாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய 4 பொதுவான தவறுகளை டாக்டர் ஹரிணி ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
போன் பார்த்துகொண்டு தாய்ப்பால் கொடுப்பது:
இன்றைய நவீன காலத்தில் பெரும்பாலானோர் மொபைல் பார்க்கும் பழக்கத்தை அதிகளவில் கொண்டுள்ளனர். இது குழந்தையை புதிதாக பெற்ற தாய்மார்களுக்கும் விதிவிலக்கல்ல. புதிதாக குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்கள், தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தையை பார்க்காமல் மொபைலை பார்த்து கொடுக்கிறார்கள். இதுபோன்ற நேரங்களில் குழந்தையிடம் பேசிகொண்டே பால் கொடுங்கள், அப்போதுதான் தாய்மார்க்களுக்கு ஆக்ஸிடோசன் அதிகரிக்கும். இதனால், குழந்தைக்கு அதிகமாக பால் சுரக்கும்.
ALSO READ: இறுக்கமாக உள்ளாடைகள் அணிவது சரியா..? பிரபல மருத்துவர் முருகசுந்தரம் விளக்கம்!
உங்கள் மீது கவனம்:
தாய்ப்பால் கொடுக்கும் போது சுய பாதுகாப்பு மிக முக்கியமானது. உங்கள் மார்பகங்கள் பால் உற்பத்தி செய்வதை உறுதி செய்ய, உங்கள் உடல் உங்கள் எலும்புகள், இரத்தம் மற்றும் தசைகளிலிருந்து ஊட்டச்சத்துக்களை எடுக்க வேண்டும். உங்கள் தசைகள் போதுமான ஊட்டச்சத்து பெறவில்லை என்றால், அவை சேமித்து வைக்கப்பட்ட ஊட்டச்சத்துக்களை குறைக்கத் தொடங்குகின்றன. தாய்மார்கள் எட்டு மணிநேர தூக்கத்தை பெறுவது முக்கியம். ஏனெனில் ஊட்டச்சத்து மற்றும் தூக்கமின்மை சோர்வுக்கு வழிவகுக்கும். இது உங்களை உணர்ச்சி ரீதியாகவும் மன ரீதியாகவும் மோசமாக உணர வைக்கும்.
புட்டிப்பால்:
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக விரைவாகவே புட்டிப்பால் கொடுக்கும் பழக்கத்தை கையில் எடுக்கிறார்கள். இது தவறு. அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய வேலை செய்யும் தாய்மார்கள் இதை மேற்கொள்கிறார்கள். இது அவசியம் என்றால், அலுவலகம் இல்லாத நேரங்களில் தாய்ப்பால் கொடுங்கள். முடிந்தவரை 6 முதல் 8 மாதங்கள் வரை குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்கக்கூடாது. இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது.
ALSO READ: ஆரோக்கிய உணவாக தோன்றும் இவை ஆபத்து.. மருத்துவர் சஹானா கூறும் அறிவுரை!
வலி ஏற்படுவது இயல்பு:
தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பக வலி முற்றிலும் இயல்பானது என்று நம்புவது தவறு . தாய்ப்பால் கொடுக்கும் தொடக்கத்தில் வலி மற்றும் அசௌகரியம் இயல்பானது, ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கக்கூடாது. தாய்ப்பால் கொடுப்பது வலிமிகுந்ததல்ல என்பதை தாய்மார்கள் அறிந்து கொள்ள வேண்டும். மார்பக வலிக்கான காரணங்களில் முலைக்காம்பை சரியாகப் பிடிக்க இயலாமை, மார்பக வீக்கம் மற்றும் தவறான தாய்ப்பால் நிலைகள் ஆகியவை அடங்கும். இதை அதிகமாக உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது.