5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?
Child Health Warning : பெரியவர்களைப் போலவே குழந்தைகளுக்கும் கால்சியம் குறைபாடு பொதுவான பிரச்னையாக மாறி வருகிறது. குழந்தைகளால் தங்கள் பிரச்னையை வெளிப்படையாக சொல்லத் தெரியாது. எனவே குழந்தைகளுக்கு ஏற்படும் சில அறிகுறிகள் மூலம் அவர்களுக்கு கால்சியம் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடிக்கலாம்.

மாதிரி புகைப்படம்
குழந்தைகள் (Children) நோய்வாய்ப்பட்டால், அவர்களால் தங்களைப் பற்றி எதையும் தெளிவாகச் சொல்ல முடியாது. குழந்தைகளின் பெற்றோர்கள் தான் அவர்களின் நடவடிக்கையை கண்காணித்து அவற்றில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில், பெரியவர்களால் கூட முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத ஏதேனும் பிரச்சனை குழந்தைகளுக்கு இருந்தால், எதிர்காலத்தில் குழந்தைகள் உடல்நலம் தொடர்பான பிரச்னைகளை சந்திக்க நேரிடும். குழந்தைகளில் இதுபோன்ற ஒரு பிரச்சனை தான் கால்சியம் (Calcium) குறைபாடு. கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன, அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
மேக்ஸ் மருத்துவமனையின் எலும்பியல் துறையின் இணை இயக்குநர் டாக்டர் அகிலேஷ் யாதவ் இதுகுறித்து தெரிவித்ததாவது, பெரியவர்களைப் போல சில குழந்தைகளும் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். . இந்தப் பிரச்சனை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிலும் ஏற்படலாம். இருப்பினும், குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு குறித்து தெரிந்திருக்காது. பெரியவர்களால் கூட அதை மதிப்பிட முடியாது. இந்தக் குறைபாட்டின் சில அறிகுறிகள் உள்ளன, அவற்றை குழந்தையின் பெற்றோர் கண்டறிந்து அந்தக் குறைபாட்டை நீக்க முயற்சிக்க வேண்டும்.
குழந்தைகளில் கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள்
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கால்சியம் குறைபாட்டின் காரணமாக சில அறிகுறிகள் தோன்றும் என்று டாக்டர் அகிலேஷ் தெரிவிக்கிறார். குழந்தைகளுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகளில் எரிச்சல், தூங்குவதில் சிரமம், தாமதமாக நடப்பது, தாமதமாக பல் முளைப்பது மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவை அடங்கும். உங்கள் குழந்தையிலும் இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், குழந்தையை நிச்சயமாக பரிசோதிக்க வேண்டும். பரிசோதனைக்குப் பிறகு, குழந்தைக்கு கால்சியம் குறைபாடு இருப்பது கண்டறியப்படும். அல்லது வேறு ஏதேனும் குறைபாடு இருந்தால், அதுவும் கண்டறியப்படலாம்.
கால்சியம் குறைபாட்டைத் தடுக்க என்ன உணவுகள் கொடுக்க வேண்டும்?
மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் குழந்தைக்கு இருந்தால், பரிசோதனை செய்து கொள்வதோடு, சில வீட்டு வைத்தியங்களையும் தொடங்க வேண்டும். குழந்தைகளுக்கு பால், தயிர், சீஸ் கொடுக்க வேண்டும். இது தவிர, கீரை மற்றும் வெந்தயத்தில் கால்சியம் உள்ளது. சில தானியங்கள் மற்றும் பழச்சாறுகளிலும் கால்சியம் உள்ளது. குழந்தைகளுக்கு மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் தெரிந்தால், இந்த உணவுகளை அவர்களின் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதற்குப் பிறகும், உங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், ஒரு மருத்துவரை அணுகி மருத்துவமனையில் உங்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். மருத்துவர் சில பரிசோதனைகள் மூலம் கால்சியம் குறைபாட்டைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிப்பார்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9 Tamil பொறுப்பேற்காது.)