Men’s Health: மீல் மேக்கர் ஆண்களின் ஆண்மையை பாதிக்குமா..? உண்மை என்ன..?

Soy Chunk Side Effects: சைவ உணவு உண்பவர்களுக்கு பிரபலமான மீல் மேக்கர் (சோயா சங்க்) ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைத்து, பாலுறவு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்கிற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால், இதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லை. மீல்மேக்கரை அதிக அளவில் உட்கொள்ளுவது தைராய்டு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

Mens Health: மீல் மேக்கர் ஆண்களின் ஆண்மையை பாதிக்குமா..? உண்மை என்ன..?

மீல் மேக்கர்

Published: 

20 Aug 2025 17:06 PM

சைவ பிரியர்களுக்கு காளான், பன்னீருக்கு பிறகு, மீல் மேக்கர் மிகவும் பிடித்த உணவு வகைகளில் ஒன்றாக உள்ளது. மீல் மேக்கரை (Soy Chunks) பொதுவாக சோயா சங்க் என்று அழைப்பார்கள். மீல் மேக்கர் புரதத்தின் சிறந்த மூலமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக முட்டை, பால், சிக்கன் மற்றும் பிற விலங்கு சார்ந்த மூலங்களை சாப்பிட விரும்பாத சைவ உணவு உண்பவர்களுக்கு விருப்ப உணவாக இருந்து வருகிறது. மீல் மேக்கரானது கொழுப்பு நீக்கப்பட்ட சோயா மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதை சமைப்பதும் எளிது, கொழுப்பும் இல்லாத ஆரோக்கிய உணவாகவும் உள்ளது. இருப்பினும், நீண்ட காலமாக மீல் மேக்கர் சாப்பிடும் ஆண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை, ஆண்மை குறைவு (Male Fertility) ஏற்படும் என்ற செய்தி பொதுவாக கூறப்பட்டு வருகிறது. அந்தவகையில், இது உண்மைதானா..? இதற்கு ஆதரங்கள் உள்ளதா உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

ஆண்களுக்கு பிரச்சனையை தருமா மீல் மேக்கர்..?

மீல் மேக்கர் சாப்பிடுவது ஆண்களின் டெஸ்டோஸ்டிரோனை குறைக்கிறது என்பது உண்மையில் உண்மை என்று கூறப்படுகிறது. டெஸ்டோடிரோன் ஹார்மோன் ஆண்கலுக்கு பாலியல் ஆசை மற்றும் தூண்டுதலை அதிகரிக்கக்கூடிய ஒன்றாகும். மீல் மேக்கரை தினசரி உட்கொள்ளும்போது இது ஆண்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. மீல் மேக்கர் எடுத்து கொள்ளும்போது ஆண்களின் பாலியல் சக்தி குறைவதாக கூறப்படுகிறது. மேலும் இது ஹார்மோன் சமநிலை, விந்தணு எண்ணிக்கை, லிபிடோ சக்தி மற்றும் கருவுறுதல் ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

ALSO READ: பெண்களே கவனம்! இந்த பொருட்கள் ஹார்மோன் சமநிலையின்மையை உண்டாக்கும்!

இதனால், ஆண்களுக்கு உடலுறவு கொள்ளும்போது ஆர்வம் குறைந்து பாலுறவு பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன ஆய்வு அது..?

கடந்த 2008ம் ஆண்டு ஸ்மால் பைலட் கிராஸ் செக்ஸனல் நடத்திய ஆய்வில், மீல் மேக்கர் அடிக்கடி எடுத்துகொள்ளும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக தெரிவித்தது. இருப்பினும், இந்த அறிக்கையை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மீல் மேக்கரை தினமும் சாப்பிடலாமா..?

மீல் மேக்கர் புரதம் நிறைந்ததாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருக்கிறது. இது திசுக்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பு, ஹார்மோன்கள், திரவங்களை சமநிலைப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல், உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குதல், எலும்பு மற்றும் தசை வளர்ச்சி போன்ற பல முக்கியமான செயல்பாடுகளை செய்ய உதவுகிறது. அப்படியானால், மீல் மேக்கரை தினமும் சாப்பிடலாமா என்றால் அது நல்லத்தல்ல. அதாவது, வாரத்திற்கு அதிகபட்சமாக 4 முறைக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது.

ALSO READ: ஆண்களிடையே அதிகரிக்கும் விந்தணு எண்ணிக்கை குறைபாடு.. இதை சரிசெய்வது எப்படி..?

மீல் மேக்கரில் கோய்ட்ரோஜன் கலவைகள் நிறைய உள்ளன. இது தினமும் எடுப்பதன்மூலம், தைராய்டு சுரப்பியை சேதப்படுத்தும். இந்த கோய்ட்ரோஜன் உடலில் அயோடின் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. எனவே, இதன் அதிகப்படியான நுகர்வானது ஹைப்போ தைராய்டிசத்தின் அபாயத்தை உண்டாக்கும்.

மீல் மேக்கர் எடுத்து கொள்பவர்களுக்கு சிலருக்கு இது ஆகாது. இது ஒவ்வாமை பிரச்சனையை உண்டாக்கலாம். அதன்படி இதை சாப்பிட்டு சேராதவர்களுக்கு வீக்கம், மூச்சுத் திணறல், படை, அனாபிலாக்ஸில் போன்ற பிரச்சனை ஏற்படலாம்.