காலையில் வெந்நீர் அருந்துவது கல்லீரலை சுத்தப்படுத்துமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
Warm Water Benefits : சமீப காலமாக மக்களிடையே உடல் நலன் குறித்து விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. இருப்பினும் அவர்கள் சமூக வலைதளங்களில் பார்க்கும் தகவல்களை அப்படியே உண்மை என நம்பி கடைபிடிக்கத் துவங்குகிறார்கள். குறிப்பாக காலையில் வெந்நீர் அருந்துவது உடல் நலனுக்கு நன்மை பயக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். இந்த கட்டுரையில் வெந்நீர் அருந்துவதால் கல்லீரலை சுத்தப்படுத்துமா என்பது குறித்து பார்க்கலாம்.

இப்போதெல்லாம் மக்கள் தங்கள் உடல்நலம் குறித்து மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள். சமூக ஊடகங்கள் (Social Media) மூலம் கிடைக்கும் தகவல்ளை நம்பி அவற்றை பின்பற்ற துவங்குகிறார்கள். தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் அது கல்லீரலைச் (Liver) சுத்தப்படுத்தி உடலை நச்சு நீக்குகிறது என்று கூறப்படுகிறது, பலர் இதைப் பின்பற்றுகிறார்கள், ஆனால் வெந்நீர் குடிப்பது உண்மையில் கல்லீரலைச் சுத்தப்படுத்துமா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். எய்ம்ஸ் மருத்துவமனையின் இரைப்பை மற்றும் குடல் துறையின் டாக்டர் சௌரப் இதுகுறித்து பேசியதாவது, கல்லீரல் நமது உடலின் மிக முக்கியமான உறுப்பு. இது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது, நச்சுக்களை வெளியேற்றுகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை சேமிக்கிறது.
கல்லீரல் தானாகவே உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வடிகட்டி, சிறுநீர் மற்றும் வியர்வை வழியாக வெளியேற்றுகிறது. எனவே, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, அதை அதிகமாக வேலை செய்ய வைக்கக்கூடாது, மாறாக அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.
வெந்நீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்
வெந்நீர் குடிப்பது மட்டும் கல்லீரலுக்கு நன்மை அளிக்காது என்று டாக்டர் சௌரப் கூறுகிறார். மேலும், ”எளிமையான வார்த்தைகளில் சொல்வதென்றால், சூடான நீர் கல்லீரலின் நச்சுக்களை நீக்குவதில்லை. வெந்நீர் குடிப்பதால் நிச்சயமாக சில நன்மைகள் இருக்கிறது. அவை,
- சூடான நீரால் செரிமான செயல்முறை மேம்படுகிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் குறைகின்றன.
- காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது.
- வெதுவெதுப்பான நீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது, இது உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
- வெதுவெதுப்பான நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற சிறிது உதவுகிறது.
வெந்நீர் குடிப்பதால் கல்லீரல் சுத்தமாகுமா?
வெறும் வெந்நீர் குடிப்பதால் கல்லீரலை முழுமையாக சுத்தம் செய்துவிட முடியாது என்று டாக்டர் சௌரப் விளக்குகிறார். கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க சூடான நீரைக் குடிப்பது கொஞ்சம் உதவியாக இருக்கும், ஆனால் கல்லீரலை முழுமையாக சுத்தப்படுத்தாது. கல்லீரலை சுத்தம் செய்யும் வேலையை கல்லீரலே செய்கிறது. உடலின் மற்ற பகுதிகளின் சுத்திகரிப்பு செயல்முறையை குறைவான அளவில் வெந்நீர் செய்யும். ஒருவர் வெறும் வெந்நீர் குடிப்பதன் மூலம் துரித உணவு, மது அல்லது பிற கெட்ட பழக்கங்களால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பைத் தடுக்க முடியும் என்று நினைத்தால், அது ஒரு தவறான கருத்து.
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?
- பச்சை காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுகளை உண்ணுங்கள்.
- அதிகமாக வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஜங்க் ஃபுட் கல்லீரலில் கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.
- மதுவைத் தவிர்க்கவும். மது கல்லீரலின் மிகப்பெரிய எதிரி.
- புகைபிடித்தல் கல்லீரலில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
- உடல் பருமனும் கொழுப்பு கல்லீரலுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
- தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள். தினமும் 30 நிமிட நடைப்பயிற்சி அல்லது லேசான உடற்பயிற்சி கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். நாள் முழுவதும் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.