Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எவரஸ்ட் மலை அடிவாரத்தில் 10 ராஜநாகம் கண்டுபிடிப்பு.. வழக்கமான ஒன்றல்ல என விஞ்ஞானிகள் கவலை..

Mount Everest: கடந்த சில மாதங்களில் எவரஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் 10 ராஜ நாகப்பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது வழக்கமான ஒன்று அல்ல என்றும் காலநிலை மாற்றத்தால் அல்லது புவி வெப்பமடைதலின் காரணமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எவரஸ்ட் மலை அடிவாரத்தில் 10 ராஜநாகம் கண்டுபிடிப்பு.. வழக்கமான ஒன்றல்ல என விஞ்ஞானிகள் கவலை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 15 Jun 2025 11:11 AM

நேபாளத்தின் எவரெஸ்ட் (Mount Everest) பகுதியில் ஆயிரம் முதல் 2700 மீட்டர் உயரத்தில் 10 ராஜநாக பாம்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாம்புகள் கோபாலேஸ்வர், பன்சியாங், சோகோல் மற்றும் ஃபுல்சௌக் ஆகிய நான்கு வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பத்து ராஜநாக பாம்புகள் (King Cobra Snake) கண்டுபிடிக்கப்பட்டது விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பொதுவாக இது போன்ற பாம்புகள் வெப்பமான சதுப்பு நிலப் பகுதிகளில் அல்லது காடுகளில் வாழக்கூடியவை. ஆனால் குளிர்ச்சியான எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான செயல் அல்ல என்றும் இது புவி வெப்பமடைதலின் விளைவுகளை எச்சரிக்கை என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாம்புகள் இடம்பெயற காலநிலை மாற்றம்தான் காரணமா?

இந்த விஷப்பாம்புகள் குளிர்ந்த சூழலில் தோன்றி இருப்பது காலநிலை மாற்றத்தை குறிக்கும் ஒரு தெளிவான செயல் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த கூற்றை எல்லா நிபுணர்களும் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு கூடுதல் ஆய்வுகள் தேவை எனவும் தெரிவிக்கின்றனர். வனவியல் நிறுவனத்தை சேர்ந்த பிஷ்ணு பாண்டே இது தொடர்பாக கூறுகையில் கொரோனா தொற்று நோய் உலகளவில் பரவுவதற்கு முன்பு கௌரிசங்கர் மலை தொடருக்கு அருகில் ராஜ நாக பாம்பின் முட்டைகள் கிடைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் 1600 முதல் 5000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஜிரி நகராட்சியிலும் நாகப்பாம்புகள் காணப்பட்டுள்ளதாகவும் என்றும் இந்த பாம்புகள் நேபாளத்தின் தெறாய் பகுதியில் பொதுவாக காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொடிய விஷம் நிறைந்த பாம்புகளில் ஒன்றான ராஜ நாகப்பாம்பு பொதுவாக இந்தியா தென்கிழக்கு ஆசியா மற்றும் பிலிப்பைன்ஸின் அடர்ந்த காடு பகுதிகளில் காணப்படும். நேபாளத்தின் குளிர்ச்சியான மற்றும் மலை அடிவாரத்திற்கு கீழ் அவற்றை பார்ப்பது அரிதான ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பாம்பான மோனோகில்டு கோப்ரா தாழ்வான மற்றும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளை காணப்படும் ஒரு பாம்பு வகையாகும். ஆனால் தற்போது இந்த இரண்டு பாம்புகளும் எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் காணப்பட்டு இருப்பது காலநிலை மாற்றத்தின் அறிகுறியாக இருக்கலாம் என கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது. அதாவது வெப்பநிலை அதிகரிக்கும் போது பாம்புகள் உயிர் வாழ்வதற்காக குளிர்ந்த இடங்களுக்கு நகரக் கூடும்.

இந்திய வனவிலங்கு நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் ரமேஷ் சின்னசாமி இது தொடர்பாக பேசுகையில், ராஜ நாகப்பாம்புகள் பொதுவாக மழைக்காடுகளில் வாழும் ஒரு பாம்பு வகை. இயற்கையில் கூச்ச சுபாவம் உள்ளவை என்றும் போதிய ஆராய்ச்சி இல்லாமல் இது காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டது என உறுதி செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

கொடிய விஷம் நிறைந்த பாம்புகள் குளிர்ந்த வெப்ப நிலைக்கு நோக்கி செல்லும்போது அங்கு ஏற்கனவே இருக்கக்கூடிய பாம்புகள் வேறு இடத்திற்கு செல்ல தள்ளப்படும் என தெரிவிக்கின்றனர். காலநிலை மாற்றத்தால் மிகவும் ஆபத்தில் உள்ள நாடுகளில் ஒன்று நேபாளம். கடந்த 15 ஆண்டுகளாக தீவிரமான வானிலை மாற்றங்களை நேபாளம் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.