Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Brain Development: மூளை ஆற்றல் மங்குகிறதா..? காரணம் என்ன..? ஆய்வில் வெளியான தகவல்!

Brain Development Ideas: புளோரிடா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு 2 வருட இடைவெளியில் நடுத்தர வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 128 பேரிடம் ஆய்வு நடத்தியது. இதில் எளிமையான வாழ்க்கை, அமைதியான தூக்கம் மற்றும் நல்ல சிந்தனை ஆகியவை மூளையை 8 வயது இளமையாக உணர வைக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.

Brain Development: மூளை ஆற்றல் மங்குகிறதா..? காரணம் என்ன..? ஆய்வில் வெளியான தகவல்!
மூளை ஆற்றல்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Dec 2025 15:08 PM IST

நமது மூளை (Brain) நமது முழு உடலையும் கட்டுப்படுத்துகிறது. மேலும், எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது. எனவே, இதன் மீது சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். இருப்பினும், இன்றைய நவீன வாழ்க்கையில், மூளையை ஆரோக்கியமாகவும், கூர்மையாகவும் வைத்திருப்பது மிக முக்கியம். இந்தநிலையில், மூளையின் வயதை கண்டறிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் (MRI Scan) மற்றும் இயந்திர கற்றல் மூலம் புளோரிடா பல்கலைக்கழக நிபுணர்கள் 128 பேரின் தரவுகளை பகுப்பாய்வு செய்தனர். அதில், நமது வழக்கங்களை வடிவமைக்கும் சிறிய, அன்றாட தேர்வுகள், மன அழுத்த பிரச்சனைகள் மற்றும் வாழ்க்கை ஆகியவை உங்கள் மூளை ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஆய்வில் கண்டறிந்தது என்ன..?

புளோரிடா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு 2 வருட இடைவெளியில் நடுத்தர வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 128 பேரிடம் ஆய்வு நடத்தியது. இதில் எளிமையான வாழ்க்கை, அமைதியான தூக்கம் மற்றும் நல்ல சிந்தனை ஆகியவை மூளையை 8 வயது இளமையாக உணர வைக்கும் என்று கண்டறிந்துள்ளனர். அதன்படி, உங்கள் மூளையின் உண்மையான வயது உங்கள் பிறந்த தேதியை பொறுத்தது அல்ல, மாறாக உங்கள் வாழ்க்கை முறையை பொறுத்தது என்றும் தெரிய வந்துள்ளது. இந்த வேறுபாடு ’மூளை வயது இடைவெளி’ என்று அழைக்கப்படுகிறது. இதுதான் மூளை ஆரோக்கியத்தை பிரதிபலிக்கிறது.

ALSO READ: தினமும் இந்த பழங்கள் சாப்பிட்டால் போதும்.. கண்களின் பார்வை திறன் கூடும்!

பழக்கவழக்கங்கள் ஏன் முக்கியம்..?

நீண்ட நாட்கள் வலி, குறைந்த வருமானம், குடும்ப பிரச்சனைகள், மன அழுத்தம் போன்ற சில வாழ்க்கை முறை மூளையை வயதான தோற்றத்தை தரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இருப்பினும், தொடர்ந்து கடைப்பிடிக்கும் நல்ல பழக்கவழக்கங்கள் மூளையின் வயதை குறைக்கும். மேலும், புத்துணர்ச்சியூட்டும் தூக்கம், ஆரோக்கியமான உடல், எடையை பராமரித்தல், புகையிலையை தவிர்த்தல், மன அழுத்தத்தை நிர்வகித்தல் ஆகியவை ஆரோக்கியமான மூளைக்கு உதவும்.

வால்நட்ஸ்:

மூளைக்கு மிகவும் நன்மை பயக்கும் ட்ரை ப்ரூட்ஸான வால்நட்ஸ் கருதப்படுகிறது. வால்நட்ஸில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் ஈ மற்றும் புரதம் நிறைந்துள்ளன. மூளை செல்களின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் ஒமேகா 2 கொழுப்பு அமிலங்கள் அவசியம். அதன்படி, தினமும் 2-3 வால்நட்ஸை தொடர்ந்து சாப்பிடுவது நினைவாற்றலை மேம்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கிறது.

புளுபெர்ரி:

மூளைக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதால் ப்ளூபெர்ரிகள் மூளை பெர்ரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றில் அந்தோசயனின் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை மூளை செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கின்றன. மேலும், வயதான காலத்தில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பை மெதுவாக்கும்.

ALSO READ: புரதம் அதிகம் எடுத்தால் சிறுநீரகம் பாதிக்குமா? மருத்துவர் அருண் குமார் விளக்கம்!

மஞ்சள்:

மஞ்சளில் குர்குமின் உள்ளது.இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தியாகும். குர்குமின் வீக்கத்தைத் தடுத்து, நினைவாற்றலை மேம்படுத்துகிறது. இது மட்டுமின்றி, புதிய மூளை செல்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.