நாட்டு கோழி Vs பிராய்லர் சிக்கன்.. எது ஆரோக்கியத்திற்கு நல்லது..?
Broiler Chicken vs Country Chicken: : சிக்கன் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. பொதுவாக சிக்கனில் அதிக அளவு புரோட்டீன் இருப்பதால் அதனை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்த நிலையில் நாட்டுக்கோழி சிறந்ததா அல்லது பிராய்லர் கோழி சிறந்ததா என்ற கேள்வி தொடர்ந்து வருகிறது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
அசைவ பிரியர்களுக்கு பெரும்பாலானோருக்கு சிக்கன் (Chicken) மிகவும் பிடித்த ஒரு உணவு. சிக்கன் ஃப்ரை, பிரியாணி (Briyani), சூப் என தங்களுக்கு விருப்பமான விதங்களில் சிக்கனை அவர்கள் விட்டுவைப்பதில்லை. ஆனால் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் பிராய்லர் கோழி சிறந்ததா? அல்லது கிராமங்களில் இயற்கையாக வளரும் நாட்டு கோழி சிறந்ததா? என்ற கேள்வி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்த இரண்டில் எது அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது? இந்தக் கேள்விக்கு மருத்துவ நிபுணர்கள் சவாரசியமான பதில்களை அளித்துள்ளனர். குறைந்த விலையில் கிடைப்பதால் பலர் பிராய்லர் சிக்கனை அதிகம் வாங்குகிறார்கள்.
ஆனால் அவற்றின் இனப்பெருக்கத்திற்குப் பின்னால் உள்ள கசப்பான உண்மை நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது. பிராய்லர் கோழிகளை விரைவாக வளர்க்க ஹார்மோன்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை அடிக்கடி சாப்பிடுவது கொழுப்பு அதிகரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. குறிப்பாக, அவற்றில் ஊட்டச்சத்துக்கள் மிகக் குறைவு என்ற கருத்து நிலவகிறது.
இதையும் படிக்க : பச்சை முட்டையை குடிப்பது உடலுக்கு அதிக புரதத்தை தருமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
நாட்டுக்கோழியின் நன்மைகள்
இயற்கையாக வளர்க்கப்பட்டு இயற்கை உணவை உண்ணும் இயற்கை கோழி இறைச்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உதாரணமாக 100 கிராம் பிராய்லர் கோழியில் 150 கலோரிகள் இருந்தாலும், நாட்டு கோழியில் 120 கலோரிகள் மட்டுமே உள்ளன. இதில் மிகக் குறைந்த கொழுப்பு உள்ளது. இதில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. நாட்டுகோழி இறைச்சியில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இரத்த சோகையைத் தடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
முக்கியமான ஊட்டச்சத்துக்கள் 54952இவை
- நாட்டுக் கோழியில் நமது உடலுக்குத் தேவையான தாதுக்கள் நிறைந்துள்ளன..
- நாட்டுக்கோழியில் தசை வலிமைக்கு தேவையான புரதத்தையும், எலும்பு வலிமைக்கு வைட்டமின்கள் டி, ஈ மற்றும் பி காம்ப்ளெக்ஸையும் வழங்குகிறது.
- அதில் உள்ள துத்தநாகம், செலினியம் மற்றும் இரும்புச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- அதில் பிராய்லர் கோழியை விட கொழுப்பின் அளவு குறைவாக இருப்பதன் காரணமாக, உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு காட்டு கோழி ஒரு சிறந்த தேர்வாகும்.
இதையும் படிக்க : பலரும் விரும்பும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. இது உடலுக்கு ஆரோக்கியமானதா?
எது சிறந்தது..?
விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், காட்டு கோழியைத் தேர்ந்தெடுப்பது நல்லது, அது சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால், காட்டு கோழியிலிருந்து மகத்தான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.