Healthy Eating Habits: பருவ காலத்தில் நோய் நாடாமல் இருக்க வேண்டுமா? தினமும் சிட்ரஸ் பழங்களை நாட வேண்டியது ஏன்?
Seasonal Fruits Benefits: பருவகால பழங்களை உண்ணுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம், சருமம் மற்றும் முடி ஆரோக்கியமாக இருக்கலாம். வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாள்தோறும் பழங்களை உட்கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் அவசியம்.

வைட்டமின் சி நிறைந்த பழங்கள்
உங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், என்ன எடுத்து கொள்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். நாள்தோறும் நீங்கள் ஆரோக்கியமாக (Health) இருக்க ஒவ்வொரு பருவ காலங்களிலும் விளையும் பருவ கால பழத்தை சாப்பிட வேண்டும். பருவகால பழங்களில் நீங்கள் எந்த பழத்தையும் சாப்பிடுவது சிறந்தது. ஒவ்வொரு நாளும் நாம் சாப்பிட எடுத்துகொள்ளும் உணவை சேர்த்து வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழத்தையும் (Seasonal Fruits) எடுத்து கொண்டால், பல நன்மைகள் கிடைக்கும். இதனால், உங்கள் இதய ஆரோக்கியம், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். மேலும், எடையும் கட்டுக்குள் இருக்கும். இதுமட்டுமின்றி, உங்கள் சருமமும், முடியும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, எந்தெந்த பழங்களை சாப்பிடுவது சிறந்தது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
சிட்ரஸ் பழங்கள்:
வைட்டமின் சி அதிகம் உள்ள ஒரு பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது. தினமும் ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவை எடுத்துகொள்ளமுடியாவிட்டால், குறைந்தபட்சம் ஒரு எலுமிச்சையை ஜூஸ் எடுத்து கொள்ளலாம். அதன்படி, காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து குடிக்கலாம். இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், சாலட்டாக எடுத்து கொள்ளலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும். கிட்டத்தட்ட அனைத்து பழங்களிலும் வைட்டமின் சி உள்ளது. எனவே, பழங்களை நாள்தோறும் எடுத்துக்கொள்ள பழகி கொள்ளுங்கள்.
ALSO READ: உங்களுக்கு இந்த 5 உடல்நல பிரச்சனைகள் இருக்கா..? ஏன் மாதுளை சாப்பிடக்கூடாது தெரியுமா?
வைட்டமின் சி நிறைந்த பழங்களை எடுத்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்:
- வைட்டமின் சி நிறைந்த பழங்களை தினமும் சாப்பிடுவது பல்வேறு நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கு நோயையும் குணப்படுத்த முடியும்.
- வைட்டமின் சியை தினமும் எடுத்து கொள்வது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், எளிதில் நோய்வாய்ப்படும் போக்கைக் குறைக்கும்.
- உங்களுக்கு சளி அல்லது இருமல் இருந்தால், தினமும் வைட்டமின் சி நிறைந்த ஒரு பழத்தை கண்டிப்பாக எடுத்து கொள்ளுங்கள். இவை இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
- வைட்டமின் சி நிறைந்த ஒரு பழத்தை தினமும் சாப்பிடுவது பருவ மாற்றத்தின்போது ஏற்படும் பல்வேறு வகையான தொற்றுநோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க செய்யும்.
- சிட்ரஸ் பழங்களை தினமும் சாப்பிடுவது, ஆண்டு முழுவதும் பளபளப்பான சருமத்தையும், முடி ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும்.
- சிட்ரஸ் பழங்கள் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை எளிதாக நீக்குவது மட்டுமின்றி, உடலின் நச்சுத்தன்மையை நீக்கவும் உதவும்
ALSO READ: காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
பழங்களை சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை:
உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், சிட்ரஸ் பழங்களை அதிகமாக சாப்பிடுவது பிரச்சினைகளை உண்டாக்கும். அதேநேரத்தில், உங்களுக்கு அதிக இரத்த சர்க்கரை இருந்தால், அதிக இனிப்புச் சுவை கொண்ட பழங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இவை உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யலாம். அதேபோல், நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது வயிற்றுப் பிரச்சினைகளை அதிகரிக்கும், எனவே கவனமுடன் சாப்பிடுவது நல்லது.