Health Tips: உங்கள் உடல்நலத்திற்கு ஏற்ற தூக்க நிலை எது? இடது பக்கமா..? வலது பக்கமா..?
Best Sleep Position: சரியான தூக்க நிலை நம் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். பக்கவாட்டில் தூங்குவது செரிமானம் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லது. முதுகில் தூங்குவது முதுகுவலிக்கு நிவாரணம் அளிக்கும். ஆனால், மூச்சுத்திணறல் உள்ளவர்கள் முதுகில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். அமில ரிஃப்ளக்ஸ் உள்ளவர்கள் இடது பக்கம் தூங்கலாம். கர்ப்பிணிகள் கடைசி மாதங்களில் முதுகுப்புறம் மற்றும் வலது பக்கம் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

தூக்க நிலை
ஒரு இரவில் முழுமையான தூக்கம் இல்லையென்றால், அதன் தாக்கம் அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு சோர்வை தரும். நமது உடல் எவ்வாறு ஓய்வெடுக்கிறது என்பதை பொறுத்தே, புத்துணர்ச்சி, ஆரோக்கியம் (Health) போன்றவை மேம்படும். ஒருவருக்கு சரியான நிலையில் தூங்கவில்லை என்றாலும், அவருக்கு செரிமானம், முதுகெலும்பு சீரமைப்பு மற்றும் சுவாசத்தின் தரம் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு தூக்க நிலைக்கு (Sleeping Positions) என்றே, நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. உதாரணமாக, உங்கள் பக்கவாட்டில் தூங்குவது குறட்டையைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில், முதுகில் அழுத்தி தூங்குவது முதுகெலும்புக்கு நல்லது. இப்படியான சூழ்நிலையில், மூச்சுத்திணறல் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு (Pregnancy Sleep) இப்படி தூங்குவது ஏற்றது அல்ல. எனவே, எப்படி தூங்குவது என்ன பலனை தரும், யார் யார் எப்படி தூங்கக்கூடாது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
பக்கவாட்டில் தூங்குதல் :
பெரும்பாலான மக்களுக்கு, பக்கவாட்டில் தூங்குவது மிகவும் பொதுவான மற்றும் நன்மை பயக்கும் நிலையாகக் கருதப்படுகிறது. இது இடது மற்றும் வலது புறமாக இருக்கலாம். உங்களுக்கு எந்த பக்கம் வசதியோ, அதற்கு ஏற்றாற்போல் தூங்கலாம்.
ALSO READ: கர்ப்ப காலத்தில் எப்படி தூங்குவது குழந்தைக்கு நல்லது..? இடது பக்கம் தூங்குவது ஏன் நல்லது ?
இடது பக்கம் தூங்குவது:
பொதுவாகவே, இடது பக்கத்தில் தூங்குவது செரிமானத்திற்கு சிறந்தது என்று கருதப்படுகிறது. இது ஈர்ப்பு விசை காரணமாக செரிமான அமைப்பை ஆதரவை கொடுத்து, அமில வீச்சு பிரச்சனையை குறைக்கிறது. அதேபோல், இடது பக்கம் தூங்குவது கர்ப்பிணிப் பெண்களுக்கும் சிறந்தது என்றும் கருதப்படுகிறது. ஏனெனில் இது இதயம் மற்றும் கருவுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
வலது பக்கமாகத் தூங்குதல்:
வலது பக்கம் தூங்குவது பலருக்கும் வசதியாக இருந்தாலும் சில நேரங்களில், இந்த நிலையில் தூங்குவது வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து, உடலின் உள் உறுப்புகளில் சிறிது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
முதுகில் தூங்குதல் :
உங்கள் முதுகில் தூங்குவது முதுகெலும்பு மற்றும் மூட்டுகளுக்கு நன்மை பயக்கும்.
நன்மைகள்:
தரையில் முதுகு அழுத்தி தூங்கும்போது தலை, கழுத்து மற்றும் முதுகு ஆகியவற்றை ஒரு நேர் கோட்டில் வைத்திருக்க உதவுகிறது. இது மூட்டுகளில் அழுத்தத்தைக் குறைக்கிறது. முகம் தலையணையைத் தொடாததால் முக சுருக்கங்களைத் தடுக்கவும் இது உதவும் .
குறைபாடுகள்:
தரையில் முதுகை அழுத்தி தூங்குவது சில வகையில் நன்மையை கொடுத்தாலும், மூச்சுத்திணறல் பிரச்சனை உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இது சுவாசத்திற்கு இடையூறு விளைவிக்கும். அதேபோல், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் ஏற்றதாக கருதப்படவில்லை. ஏனெனில் இது கருவுக்கு இரத்த ஓட்டத்தை குறைக்கும்.
ALSO READ: கொலஸ்ட்ரால் இந்தப் பழக்கங்களால் வேகமாக அதிகரிக்கும்.. இப்படி தடுக்கவில்லை என்றால் ஆபத்துதான்..!
எல்லா தூக்க நிலைகளும் அனைவருக்கும் சமமாக நன்மை பயக்கும் என்று அர்த்தமல்ல. எனவே, சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் சில தூக்க நிலைகளைத் தவிர்க்க வேண்டும். அவை பின்வருமாறு..
- மூச்சுத்திணறல் உள்ளவர்கள் முதுகில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும் .
- அமில ரிஃப்ளக்ஸ் நோயாளிகள் இடது பக்கத்தில் தூங்க அறிவுறுத்தப்படுகிறார்கள் .
- கர்ப்பிணிப் பெண்கள், குறிப்பாக கடைசி மாதங்களில், தங்கள் முதுகு புறம் மற்றும் வலது பக்கம் தூங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- நீண்ட நாட்களாக தோள்பட்டை அல்லது இடுப்பு வலி உள்ளவர்கள், அழுத்தத்தைக் குறைக்க பக்கவாட்டில் தூங்கும்போது தலையணையைப் பயன்படுத்தலாம் .
எனவே, தூங்கும் நிலை என்பது ஆறுதலைப் பற்றியது மட்டுமல்ல, அது நமது ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். சரியான முறையில் தூங்குவது நீண்ட காலத்திற்கு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.