Health Tips: பலவீனத்தை தரும் இரும்புச்சத்து குறைபாடு.. இந்த 6 சைவ உணவுகள் சரிசெய்யும்..!
Iron Content: இரும்புச்சத்து குறைபாட்டைப் பூர்த்தி செய்ய தாங்கள் என்ன சாப்பிட வேண்டும்? நீங்களும் ஒரு சைவ உணவு உண்பவராக இருந்து, உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை இயற்கையான முறையில் பூர்த்தி செய்ய விரும்பினால், இந்த 6 சைவ உணவுகளை எடுத்து கொள்ளலாம்.

இரும்புச்சத்து உணவுகள்
இரும்புச்சத்து (Iron Content) நமது உடலுக்கு ஒரு முக்கியமான ஊட்டச்சத்து. இது குறையும்போது இரத்த சோகை போன்ற கடுமையான பிரச்சனைகள் உடலில் தோன்ற தொடங்கும். இதன் குறைபாடு சோர்வு, பலவீனம், சருமத்தின் மஞ்சள் நிறம், தலைச்சுற்றல் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை கூட ஏற்படுத்தும். இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்ய ரெட் மீட், பீன்ஸ் மற்றும் கடல் உணவுகள் சிறந்தவை ஆகும். இருப்பினும், சைவ உணவு உண்பவர்களுக்கு தானியங்களும், வைட்டமின்களும் (Vitamins) இரும்பின் நல்ல மூலமாகும். உங்கள் உணவில் ஓட்ஸ், தினை மற்றும் ப்ரவுன் ரைஸ் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். இதுபோன்ற சூழ்நிலையில், சைவ உணவு உண்பவர்களின் மனதில் ஒரு கேள்வி எழுகிறது. இரும்புச்சத்து குறைபாட்டைப் பூர்த்தி செய்ய தாங்கள் என்ன சாப்பிட வேண்டும்? நீங்களும் ஒரு சைவ உணவு உண்பவராக இருந்து, உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை இயற்கையான முறையில் பூர்த்தி செய்ய விரும்பினால், இந்த 6 சைவ உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
பசலைக் கீரை:
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளில் முதன்மையானது பசலைக் கீரை. 100 கிராம் பசலைக் கீரையில் சுமார் 2.7 கிராம் இரும்புச்சத்து உள்ளது. இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. அதன்படி பசலைக் கீரை சூப் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.
ALSO READ: தினமும் இந்த பழங்கள் சாப்பிட்டால் போதும்.. கண்களின் பார்வை திறன் கூடும்!
பருப்பு வகைகள்:
பாசிப்பருப்பு , துவரம் பருப்பு மற்றும் கொண்டைக்கடலை ஆகியவை இரும்புச்சத்துக்கான நல்ல மூலமாகும். ஒரு கப் பருப்பில் சுமார் 6.6 கிராம் இரும்புச்சத்து உள்ளது. இது உடலில் இரத்தத்தை அதிகரிக்க மிகவும் உதவியாக இருக்கும் . வைட்டமின் சி நிறைந்த உணவுடன் பருப்பு வகைகளை எடுத்துக் கொண்டால், இரும்புச்சத்து உடலுக்கு சரியான முறையில் கிடைக்கும்.
கொண்டைக்கடலை:
இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் தங்கள் உணவில் கொண்டைக்கடலையை சேர்த்துக் கொள்ளலாம். இரும்புச்சத்து தவிர, இதில் புரதம் மற்றும் நார்ச்சத்துகளின் நல்ல மூலமாகவும் பார்க்கப்படுகிறது.
மாதுளை:
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க மாதுளை சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். 100 கிராம் மாதுளை விதைகளில் 0.31 மி.கி இரும்புச்சத்து உள்ளது. தினமும் ஒரு மாதுளை சாப்பிடுவது இரத்த அளவை கணிசமாக அதிகரிக்க உதவுகிறது . இரும்புச்சத்து தவிர, மாதுளையில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
ALSO READ: தினமும் காலையில் டோண்ட் மிஸ்..! இதய ஆரோக்கியத்தை பராமரிக்கும் 6 பானங்கள்..
இது தவிர, வைட்டமின் சி நிறைந்த உணவுகளுடன் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உறிஞ்சுதல் சிறப்பாக இருக்கும். தானியங்களைத் தவிர, உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்ய செறிவூட்டப்பட்ட உணவுகளும் ஒரு நல்ல வழி. செறிவூட்டப்பட்ட உணவுகள் என்பது டோஃபு போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகள் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றல் மூலத்தையும் சரிசெய்யும்.