Toxic Movie: ரத்தம் தெறிக்க.. வெளியானது யாஷின் ‘டாக்சிக்’ படத்தின் அதிரடி டீசர்!

Toxic Movie Teaser: தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுவரும் கதாநாயகன்தான் யாஷ். இவரின் நடிப்பில் பான் இந்திய அளவில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் டாக்சிக். தற்போது இப்படத்தின் அதிரடி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவிவருகிறது.

Toxic Movie: ரத்தம் தெறிக்க.. வெளியானது யாஷின் டாக்சிக் படத்தின் அதிரடி டீசர்!

டாக்சிக் திரைப்பட டீசர்

Updated On: 

20 Feb 2026 10:27 AM

 IST

கன்னட சினிமாவில் சாதாரணமாக படங்களில் நடித்துவந்தவர் யாஷ் (Yash). இவர் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனை போலவே சின்னத்திரையில் பிரபலமானவராக இருந்துவந்தார். பின் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தினால், படங்களிலும் தொடர்ந்து நடித்துவந்தார். அந்த விதத்தில் ஆரம்பத்தில் கன்னடத்தில் இவர் நடித்துவந்த படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்புகள் இல்லை. இருந்தாலும் தொடர்ந்து படங்களில் கதாநாயகனாகவே நடித்துவந்தார். அப்படி நடித்துவந்த இவருக்கு, பான் இந்திய ளவிற்கு எதிர்பாராத வரவேற்பைக் கொடுத்த திரைப்படம்தான் கே.ஜி.எஃப் (KGF). இயக்குநர் பிரஷாந்த் நீல் (Prashanth Neel) இயக்கத்தில் வெளியான இப்படம் பான் இந்திய அளவிற்கு சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து கே.ஜி.எஃப் 2 படமும் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இந்த வரிசையில் யாஷ், அதிரடி கேங்ஸ்டராக நடித்துள்ள திரைப்படம்தான் டாக்சிக் : ஏ ஃபரி டேல் ஃபார் கிரௌன் அப்ஸ் (Toxic: A Fairy Tale for Grown-Ups).

இப்படத்தின் கதையை யாஷ் இணைந்து எழுத, இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கியுள்ளார். அந்த வகையில் சுமார் ரூ 600 கோடிகளுக்கு மேல் பொருட்செலவில் இப்படமானது தயாராகியுள்ளது. அந்த வகையில் இன்று 2026 பிப்ரவரி 20ம் தேதியில் இப்படத்தின் முதல் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ‘ஒருவரின் வெற்றிக்காக மற்றொருவர் மகிழ்வார்கள்’ – விஜய் மற்றும் அஜித் குறித்து ஷாலினி பேச்சு!

யாஷின் டாக்சிக் : ஏ ஃபரி டேல் ஃபார் கிரௌன் அப்ஸ் படத்தின் டீசர் குறித்து வெளியான பதிவு :

யாஷின் டாக்சிக் படத்தின் ரிலீஸில் மாற்றமா:

இந்த டாக்சிக் படத்தை தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தை தயாரித்த கே.வின்.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன், யாஷும் இணைந்து தயாரித்துள்ளர். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூ இசையமைத்துள்ள நிலையில், பாடல்களில் இசையமைப்பாளர் அனிருத் பணியாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படமானது கிட்டத்தட்ட 7 மொழிகளில் தயாராகியுள்ளது. இப்படத்தில் நடிகர் யாஷுடன், நயன்தாரா, டோவினோ தாமஸ், ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, தாரா சுதா ரியா, ஹுமா குரேஷி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஒரு சோப்பு விளம்பரத்தில் நடிக்க இத்தனை கோடியா? – எகிறும் தமன்னாவின் சம்பளம்!

இந்த படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியாகும் என படக்குழு முன்பே அறிவித்திருந்தது. இதே தேதியில் தெலுங்கில் 2 கிட்டத்தட்ட படங்கள் வெளியாகவிருந்த நிலையில், பின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், ரிலீஸில் எந்த மாற்றமும் இல்லை என படக்குழு உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் Emergency Quota .. எத்தனை சீட்கள் ஒதுக்கப்படும்?
மணமகளின் பையை திருடிச் சென்ற நபர்.. ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி கொள்ளை..
சந்தேகத்தின் பெயரில் காதலியை கொலைசெய்த காதலன்
ஏப்.30 வரை "ஜனநாயகன்" வெளியாக வாய்ப்பில்லை - ரசிகர்கள் அதிர்ச்சி!