பிரமாண்ட இயக்குநர் சங்கருக்கு இப்போ இருக்கும் இயக்குநர்கள் யாரை பிடிக்கு? அவரே சொன்ன லிஸ்ட்
Director Sankar: இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் இயக்குநர் சங்கர். இவர் சமீப காலமாக வெளியாகும் படங்களை பார்த்துவிட்டு தொடர்ந்து இயக்குநர்களையும் படக்குழுவையும் வாழ்த்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் உள்ள இயக்குநர்களில் யாரை பிடிக்கும் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இயக்குநர் சங்கர்
கோலிவுட் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரமாண்ட இயக்குநர் என்று கொண்டாடப்படுபவர் இயக்குநர் சங்கர். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இவரை பிரமாண்ட இயக்குநர் என்று அழைக்க காரணம் படத்தில் ஒரு பாடலுக்காக பல கோடிகள் வரை செலுவு செய்து ரசிகர்களுக்கு கலர்ஃபுல்லாக காட்சியை அமைப்பது இயக்குநர் சங்கரின் பழக்கம். அதன் காரணமாகவே இவரை பிரமாண்ட இயக்குநர் சங்கர் என்று அழைக்கப்படுகின்றார்.
சமீபத்தில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களும் அடுத்தடுத்து எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் என சங்கர் இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களும் பெரிய பட்ஜெட்டில் உருவாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற தவறியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்கள் தோல்வி குறித்து அதிர்ப்த்தி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சங்கருக்கு பிடித்த 5 இயக்குநர்கள்:
இந்த நிலையில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தாலும் இந்திய சினிமாவில் வெளியாகும் படங்களில் சிறந்த படங்களை பாராட்ட இயக்குநர் சங்கர் தவறியத்தில்லை. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் சங்கரிடம் சமீபத்தில் உள்ள இயக்குநர்களில் யார் பிடிக்கும் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த இயக்குநர் சங்கர் தற்போது உள்ள இயக்குநர்களில் தமிழரசன் பச்சைமுத்து, மாரி செல்வராஜ், அருண் குமார், நித்திலன் சுவாமிநாதன், தேசிங்கு பெரிய சாமி ஆகிய இயக்குநர்களை தற்போது உள்ள தலைமுறையில் பிடிக்கும் என்று அவர் பதிலளித்துள்ளார். இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… எம் மகன் படத்தில் அந்த சீன்ல நாசர் சார் நிஜமாவே அடிச்சாரு – நடிகர் பரத்
இயக்குநர் சங்கரின் சமீபத்திய எக்ஸ் தள பதிவு:
#Madharaasi An engaging commercial entertainer with many enjoyable theatrical moments. @ARMurugadoss connected the elements and emotions brilliantly. Blending the love track and crime track was done well. @Siva_Kartikeyan ‘s characterisation was interesting and different which he…
— Shankar Shanmugham (@shankarshanmugh) September 5, 2025