சைக்கோ கில்லராக செல்வராகவன்… காவல்துறை அதிகாரியாக விஷ்ணு விஷால்… ஆர்யன் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு

Aaryan Trailer Tamil | விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஆர்யன். சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

சைக்கோ கில்லராக செல்வராகவன்... காவல்துறை அதிகாரியாக விஷ்ணு விஷால்... ஆர்யன் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு

ஆர்யன்

Updated On: 

19 Oct 2025 13:50 PM

 IST

நடிகர் விஷ்ணு விஷால் (Actor Vishnu Vishal) தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனதில் இருந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகும் இன்வஸ்டிகேஷன் த்ரில்லர் படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஸ்போர்ட்ஸ் படமாக இருந்தாலும் சரி போலிஸ் அதிகாரியாக நடிகர் விஷ்ணு விஷால் நடித்து இருதாலும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். அதன்படி தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஆர்யன். சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

மேலும் இவருடன் இணைந்து நடிகர்கள் செல்வராகவன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குநர் பிரவின் கே எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் படத்தினை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பாக நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார். மேலும் இந்தப் படம் வருகின்ற 31-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் அப்டக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

கொல்லப்போவது யாரை என்று சொல்லி சொல்லி கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன்:

அதன்படி இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் போலீஸாக நடித்து உள்ள நிலையில் நடிகர் செல்வராகவன் சைக்கோ கொலைகாரனாக நடித்துள்ளது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அந்த கொலைகள் அனைத்தையும் செல்வராகவன் ஒரு ஆர்ட் மாதிரி செய்வதாக அதில் விஷ்ணு விஷால் கூறுகிறார். அப்படி அவர் செய்யும் கொலைகள் அனைத்தயும் விஷ்ணு விஷால் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதை.

Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்தது டெல்லி க்ரைம் சீசன் 3 – வைரலாகும் அப்டேட்

ஆர்யன் பட ட்ரெய்லர் இதோ:

Also Read… குத்துனது சரியா? தப்பா? கம்ருதினை லெஃப்ட் ரைட் வாங்கும் விஜய் சேதுபதி – வைரலாகும் பிக்பாஸ் தமிழ் வீடியோ!