Vishnu Vishal: சூப்பர் ஹீரோ படம் இயக்கவேண்டும் என்பது எனது ஆசை.. விஷ்ணு விஷால் ஓபன் டாக்!
Vishnu Vishal About His Wish: தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஷ்ணு விஷால். இவரின் நடிப்பில் அதிரடி படமாக ஆர்யன் வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. இந்நிலையில் இவரின் நிறைவேறாத ஆசை குறித்து ஓபனாக பேசியுள்ளார். அது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

விஷ்ணு விஷால்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் போன்ற பணிகளை செய்துவருபவர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal). இவரின் முன்னணி நடிப்பில் பல படங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக இவரின் நடிப்பில் வெளியான ராட்சசன் (Ratsasan) படமானது பான் இந்தியா அளவில் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. அந்த வகையில் அந்த படத்தை போன்ற திரில்லர் கதைக்களத்தில் இவர் நடித்திருக்கும் படம்தான் ஆர்யன் (Aaryan). இந்த திரைப்படத்தை இயக்குநர் பிரவீன் கே (Praveen K) இயக்க, விஷ்ணு விஷால் முன்னணி நயாகனாக நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் (Shraddha Srinath) நடித்திருக்கிறார். இந்த ஆர்யன் படத்தை விஷ்ணு விஷால் தயாரித்திருக்கிறார்.
இப்படம் மிக பிரம்மாண்டமாக வரும் 2025 அக்டோபர் 31ம் தேதி முதல் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பான சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விஷ்ணு விஷால், தனது சூப்பர் ஹீரோ படம் இயக்குவது குறித்த நிறைவேறாத ஆசை பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க : டியூட் படத்தின் கதையை ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான் எழுதினேன் – கீர்த்திஸ்வரன் பேச்சு!
தனது நிறைவேறாத ஆசை குறித்து வெளிப்படையாகப் பேசிய விஷ்ணு விஷால்:
அந்த நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு விஷால், ” தென்னிந்தியாவில் நான் தான் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படத்தை இயக்கவேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கு முன்னதாக மலையாளத்தில் மின்னல் முரளி என்ற படமானது வந்தது. பின் அதைத் தொடர்ந்து தற்போது லோகா என்ற படமானது வெளியாகி மக்களிடையே மிக பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுவிட்டது . நான் இன்னும் என்னுடைய சூப்பர் ஹீரோ திரைப்படத்திற்காக காத்திருக்கிறேன்” என அந்த நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலானது தற்போது ரசிகரக்ள் மத்தியில் வைரலாகிவருகிறது.
ஆர்யன் படம் பற்றி விஷ்ணு விஷால் வெளியிட்ட பதிவு :
Three on a spree.
The k*ller sets himself free. #Aaryan pic.twitter.com/lHOASq8r4F— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) October 28, 2025
விஷ்ணு விஷாலின் புதிய படங்கள் :
நடிகர் விஷ்ணு விஷால் ஆர்யன் படத்தை அடுத்ததாக கட்டா குஸ்தி 2 என்ற படத்தில் நடித்துவருகிறார். இதில் இவர் கதாநாயகனாக நடிக்க, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்துவருகிறார். இப்படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கிவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் சங்கர்!
இந்த படத்தை அடுத்ததாக இவர் ராட்சசன் 2 படத்திலும் நடிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் இவரின் நடிப்பில் ஆர்யன் படத்தை அடுத்தக்க வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம் இரண்டு வானம். இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் இந்த் 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.