கரூர் விவகாரம்… விஷ்ணு விஷாலின் ஆர்யன் படம் அப்டேட் ஒத்திவைப்பு

Actor Vishnu Vishal: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள ஆர்யன் படம் குறித்த அப்டேட் இன்று வெளியாவதாக இருந்த நிலையில் கரூர் சம்பவம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரூர் விவகாரம்... விஷ்ணு விஷாலின் ஆர்யன் படம் அப்டேட் ஒத்திவைப்பு

ஆர்யன் படம்

Published: 

28 Sep 2025 20:37 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் விஷ்ணு விஷால் (Actor Vishnu Vishal). உண்மையிலேயே கிரிக்கெட் வீரரான இவர் படத்தில் கபடி வீரராக நடித்து இருந்தார். அறிமுகம் ஆன முதல் படமே விஷ்ணு விஷாலுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடித்ததற்காக அறிமுக நடிகருக்கான விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தார் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இறுதியாக நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்தப் படம் லால் சலாம். இந்தப் படத்தில் விக்ராந்தும் விஷ்ணு விஷால் உடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தனது தம்பி ருத்ரா நாயகனாக அறிமுகம் ஆன முதல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார் நடிகர் விஷ்ணு விஷால். மேலும் இந்த ஓஹோ எந்தன் பேபி படத்தை அவரே தயாரித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன் படத்தின் அப்டேட்டை ஒத்திவைத்த படக்குழு:

இந்த நிலையில் ஓஹோ எந்தன் பேபி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் படங்களில் கமிட்டாகி வருகிறார். அதன்படி இரண்டு வானம், மோகன்தாஸ், ஆர்யம் மற்றும் கட்டா குஸ்தி 2 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று ஆர்யன் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிடுவதாக அறிவித்து இருந்தது ஆனால் கரூரில் விஜய் பேரணியில் கலந்துகொண்டு பலர் உயிரிழந்த நிலையில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் வருத்தத்தில் உள்ளனர்.

இதன் காரணமாக படத்தின் அப்டேட்டை ஒத்திவைப்பதாக விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். முன்னதாக விஜய் சேதுபதியின் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு நிகழ்வையும் ஒத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… டிராகன் பட ஷூட்டிங் அனுபவம் குறித்து ஓபனாக பேசிய கயாடு லோஹர்

நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் ரிலீஸ் எப்போது? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு