விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியானது விஷாலின் மகுடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
Magudam Movie First Looke Poster: நடிகர் விஷால் தற்போது அவரது 35-வது படமான மகுடம் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிவித்த நடிகர் விஷால் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

மகுடம்
கோலிவுட் சினிமாவில் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் நடிகர் விஷால் (Actor Vishal). இவர் தமிழ் சினிமாவில் கடந்த 1989-ம் ஆண்டு வெளியான ஜாடிக்கேத்த மூடி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 2004-ம் ஆண்டு இயக்குநர் காந்தி கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான செல்லமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். 2004-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன நடிகர் விஷால் 20 ஆண்டுகளில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான பல ஆக்ஷன் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் விஷால் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மத கஜ ராஜா.
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு படமாக்கப்பட்ட மத கஜ ராஜா படம் கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. அந்த படம் வெளியான போது புதிதாக எடுக்கப்பட்ட படங்களும் வெளியாகி இருந்தது. ஆனால் அதனை எல்லாம் பின்னுக்கு தள்ளி மத கஜ ராஜா படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வரவேற்பு விஷால் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் எந்தப் படத்தில் நடிக்கிறார் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவரது 35-வது படத்திறகான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
மாஸாக வெளியானது விஷாலின் மகுடம் படத்தின் போஸ்டர்:
அதன்படி நடிகர் விஷாலின் 35-வது படத்திற்கு மகுடம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் முடிவடைந்ததாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகின்றது.
விஷாலின் இந்த 35-வது படத்தை இயக்குநர் ரவி அரசு இயக்கி வருகிறார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர் விஷால் உடன் இணைந்து நடிகர்கள் துஷாரா விஜயன் மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு படக்குழு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
Also Read… LCU-வில் இணையும் நடிகர் ரவி மோகன் – வைரலாகும் தகவல்
நடிகர் விஷால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
And finally, happy and elated and excited with full-on positivity to reveal the first look of my next film #Magudam in Tamil and #Makutam in Telugu. Hope u all like it. Completed the 2nd schedule n bak to Chennai. More surprises awaiting in the near future. Love u darlings… pic.twitter.com/6j3dl2fw3q
— Vishal (@VishalKOfficial) August 27, 2025
Also Read… ஜெயிலர் 2 படத்தில் ஃபைனல் ஷூட்டிங் எங்கு எப்போது? வைரலாகும் தகவல்