மகாராஜா 2 படத்தின் கதையை முடித்துவிட்டார் இயக்குநர் நித்திலன் – நடிகர் விஜய் சேதுபதி

Maharaja Movie Part 2 Update: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் மகாராஜா. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மகாராஜா 2 படத்தின் கதையை முடித்துவிட்டார் இயக்குநர் நித்திலன் - நடிகர் விஜய் சேதுபதி

மகாராஜா

Published: 

15 Mar 2026 16:19 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் நித்திலன் சாமிநாதன். மிகவும் அழுத்தமான கதையை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் நித்திலன் சாமிநாதனை தமிழ் ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக்கியது. இந்தப் படத்தை தொடர்ந்து இரண்டாவதாக இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான படம் மகாராஜா. நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் அப்பா – மகள் செண்டிமெண்டை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் இந்திய சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி உலக அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மகாராஜா 2 படத்தின் கதையை முடித்துவிட்டார் இயக்குநர் நித்திலன்:

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று படக்குழு முன்னதாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட்டை தெரிவித்துள்ளார். அதன்படி விஜய் சேதுபதி கூறியதாவது மகாராஜா படத்தின் 2-ம் பாகத்திற்கான கதையை இயக்குநர் நித்திலம் எழுதி முடித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த கதையை கேட்பதற்காக தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பாக்கியலட்சுமி – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குநரின் புதிய தொடர் டைட்டில் இதுவா? யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியும்?

இணையத்தில் வைரலாகும் நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சு:

Also Read… தாய் கிழவி படத்திலிருந்து வெளியானது டெலீட்டட் சீன்

Follow Us
நேதாஜியின் தொப்பியை காணவில்லை - பேரன் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய கப்பல்களுக்கு ஹார்முஸ் வழியாக பாதுகாப்பாக செல்லலாம் - அனுமதி வழங்கிய ஈரான்
இந்திய சகோதரர்களுக்கு அமெரிக்காவில் 400 ஆண்டுகள் சிறை தண்டனை
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - இன்ஃபோசிஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு