Kingdom : டிக்கெட் முன்பதிவில் சாதனை.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்துக்கு அமோக வரவேற்பு!
Vijay Deverakonds Kingdom Movie : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரின் நடிப்பில் கிங்டம் படமானது ரிலீஸிற்கு தயாராகியுள்ளது. இப்படம் வரும் 2025, ஜூலை 31ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. வெளிநாடுகளில் டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்துவரும் இப்படத்திற்கு, சென்சார் குழு யு/ஏ தரச் சான்றிதழை வழங்கியுள்ளது.

கிங்டம் திரைப்படம்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda). இவரின் நடிப்பில் பல படங்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தி பேமிலி ஸ்டார். இந்த படமானது இவருக்குக் கலவையான வரவேற்பைக் கொடுத்திருந்தது. அந்த படைத்ததை அடுத்ததாக இவரின் நடிப்பில் பான் இந்திய படமாக உருவாகியிருப்பது கிங்டம் (Kingdom). இந்த திரைப்படத்தைத் தெலுங்கு பிரபல இயக்குனர் கௌதம் தின்னனுரி (Gowtam Tinnanuri) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கிங்டம் படத்தை, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்குத் தமிழ் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துள்ளார்.
இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த கிங்டம் படமானது வரும் 2025, ஜூலை 31ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தணிக்கை சான்றிதழை வழங்கியுள்ளது. மேலும் இந்த கிங்டம் படமானது லண்டனில் சுமார் 10,000 டிக்கெட் முன் பதிவு செய்து சாதனை படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கூலி படத்தில் ரஜினிகாந்த்தின் மகள் இல்லை.. தனது கதாபாத்திரம் குறித்து ஸ்ருதி ஹாசன் விளக்கம்!
கிங்டம் படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த பதிவு :
The gun is loaded
And The rage is real 🔥BLAZING ALL GUNS with a U/A Certificate 💥💥
Let the rampage begin with the #KingdomTrailer today 🌋 #Kingdom #KingdomOnJuly31st @TheDeverakonda @anirudhofficial @gowtam19 @ActorSatyaDev #BhagyashriBorse @dopjomon #GirishGangadharan… pic.twitter.com/qTLheP8qMY
— Sithara Entertainments (@SitharaEnts) July 26, 2025
இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் ஆக்ஷன் கதையாக இந்த கிங்டம் படம் உருவாகியுள்ளது. அவரது ஜெர்சி படத்தைப் போலவே இந்தப் படமும் ரசிகர்களால் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனின் இசை ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. கதாநாயகி பாக்யஸ்ரீ போர்ஸ் உடனான விஜய் தேவரகொண்டாவின் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக உள்ளது என சென்சார் அதிகாரிகள் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதையும் படிங்க : சூர்யாவின் மேல் இருக்கும் அன்பு.. விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்!
கிங்டம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் :
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12வது திரைப்படமாக இந்த கிங்டம் படம் உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, ஜூலை 31ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி, இன்று 2025, ஜூலை 26ம் தேதியில் திருப்பதியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.