திருமண கொண்டாட்டங்கள் ஓவர்.. நெக்ஸ்ட் ஷூட்டிங்கிற்கு தயாரான விஜய் தேவரகொண்டா?

Ranabaali Movie Shooting: தென்னிந்திய சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் பிரபல நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் மற்றும் ராஷ்மிகா இருவரும் கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமண கொண்டாட்டங்களும் தொடர்ந்து நடைபெற்றுவந்தது. இந்நிலையில் அதையெல்லாம் முடித்துவிட்டு தற்போது தனது புது படத்திற்கான ஷூட்டிங்கிற்கு அவர் தயாராகியுள்ளாராம்.

திருமண கொண்டாட்டங்கள் ஓவர்.. நெக்ஸ்ட் ஷூட்டிங்கிற்கு தயாரான விஜய் தேவரகொண்டா?

விஜய் தேவரகொண்டா

Updated On: 

10 Mar 2026 15:03 PM

 IST

தெலுங்கு சினிமாவில் தற்போது உச்ச நடிகர்களில் ஒருவராக திகழ்ப்பவர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda). இவர் தற்போது முற்றிலும் ஆக்ஷன் நிறைந்த படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கியுள்ளார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான கிங்டம் (Kindom) என்ற படமானது இவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இதையடுத்தாக அடுத்தடுத்த புது படங்களிலும் இவர் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ராஷ்மிகா மந்தனாவுடன் (Rashmika Mandanna) இவர் பல வருடங்களுக்கு பின் ஜோடியாகும் படம்தான் ரணபாலி (Ranabaali). இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடி இருவருமே பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2026 பிப்ரவரி 26ம் தேதியில் திருமணம் செய்துகொண்டிருந்தனர். இவர்களின் திருமணமும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது.

அந்த வகையில் திருமணத்தை தொடர்ந்து, இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் நிகழ்வுமே சிறப்பாக நடைபெற்றிருந்தது. திருமணம் முடிந்த கையேடு இல்லறவாழ்கையில் பிஸியாகியிருந்தனர். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது ரணபாலி படத்தின் ஷூட்டிங்கில் இணைய தயாராகியுள்ளாராம்.

இதையும் படிங்க: இந்தியன் 3 பட ஷூட்டிங்.. தயாரிப்பு நிறுவனத்திற்கு கெடுவிதித்த சங்கர்.. பின்னணி என்ன?

ரணபாலி திரைப்படம் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த ரணபாலி படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருமே இணைந்து நடித்துவருகிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்த படத்தை பிரபல இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் இயக்கிவருகிறார். மேலும் இதை குட் பேட் அக்லி மற்றும் டியூட் போன்ற படங்களை தயாரித்திருந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனமானது தயாரித்துவருகிறது. இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், தற்போது விரைவில் இதன் ஷூட்டிங்கில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவருமே இணையவுள்ளார்களாம்.

இதையும் படிங்க: KH x RK படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் கர்னூரில் நடைபெறவுள்ள நிலையில், இதன் ஷூட்டிங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா வரும் மார்ச் 12ம் தேதியில் இணைகிறாராம். இந்த ரணபாலி படமானது கடந்த 1854ம் ஆண்டு முதல் 1878 வரை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுவருகிறதாம். இதில் விஜய் தேவரகொண்டா போர் வீரனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது .இப்படத்திற்கு அஜய்-அதுல் இசையமைக்க வரும் 2026 செப்டம்பர் 11ம் தேதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..