Nooru Saami: விஜய் ஆண்டனியின் நூறு சாமி.. ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகிறது தெரியுமா?
Nooru Saami First look Release Update: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளராகவும் இருந்துவருபவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் தயாராகியுள்ள படம்தான் நூறுசாமி. இப்படத்தின் முதல் பார்வை எப்போது வெளியாகும் என்பது குறித்து படக்குழு சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நூறு சாமி திரைப்படம்
நடிகர் விஜய் ஆண்டனியின் (Vijay Antony) நடிப்பில் ஆண்டுக்கு 2-க்கும் குறையாமல் திரைப்படங்கள் வெளியாகிவரும். அந்த வகையில் இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டில் மார்கன் (Maargan) மற்றும் சக்தித் திருமகன் (Sakthi Thirumagan) என இரு படங்கள் வெளியாகியிருந்தது. இதில் அரசியல் கதைக்களத்தில் வெளியான சக்தித் திருமகன் படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த் படத்தை தொடர்ந்து புது படங்களில் ஒப்பந்தமாகி நடிக்க தொடங்கியிருந்தார். அந்த வகையில் தயாரிப்பாளராகவும் இவர் படங்களை உருவாகிவரும் நிலையில், சமீபத்தில் பூக்கி (Pookie) என்ற படத்தினை தயாரித்திருந்தார். இந்த படமானது கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில் எதிர்பார்த்த வரவேற்பைக் கொடுக்கவில்லை.
இதில் அவரின் தங்கையின் மகன் அஜய் திஷன் (Ajay Dishan) நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் சிறப்பாக உருவாகிவரும் படம்தான் நூறு சாமி (Nooru sami). இதை இயக்குநர் சசி (Sasi) இயக்கியுள்ள நிலையில், தற்போது இந்த திரைப்படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கர படத்திலிருந்து வெளியானது வாயா ஏ கரசாமி பாடலின் லிரிக்கள் வீடியோ
விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் முதல் பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு பதிவு :
A new family.
A new life.
Where every prayer has a beginning.First Look of #Noorusaami –
16 March#NoorusaamiFromMay1@vijayantony #Sasi @vijayantonyfilm #Swasika @AJDhishan990 @karunaasethu @jose_lijomol #BalajiSakthivel @Sakthi_Raj7 @kavyaanil_ @padinekumar_ofl pic.twitter.com/axkEneH5xb— VijayAntonyFilmCorporation (@vijayantonyfilm) March 14, 2026
நூறு சாமி திரைப்படம் :
நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம்தான் நூறுசாமி. இதை இயக்குநர் சசி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் ஆன்டனியின் பிச்சைக்காரன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து தற்போது 2வது முறையாக இணைந்துள்ள படம்தான் நூறுசாமி. இதில் விஜய் ஆண்டனி லீட் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் அஜித் திஷன், லிஜோ மோல் ஜோஸ், சுவாசிக்க விஜய், போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: சில பயணங்களுக்குக் கால தாமதமாகும்… ஆனால் சேருமிடம் எப்போதும் சிறப்பானதாக இருக்கும் – ஒன்ஸ்மோர் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
இப்படத்திற்கு இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். இந்த் படமானது பிச்சைக்காரன் படத்தை போலவே, மகன் மற்றும் தாய்க்கு இடையேயான அன்பு குறித்த கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். அந்த வகையில் இப்படத்தை வரும் 2026 மே 1ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இந்த படமானது விஜய் ஆண்டனிக்கு ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.