Maargan: மார்கன் படத்தின் அப்டேட்.. விஜய் ஆண்டனி ரசிகர்கள் ஹேப்பி!

Vijay Antony Maargan Movie Updates : தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் மற்றும் இசையமைப்பாளராக இருந்து வருபவர் விஜய் ஆண்டனி. இவரின் முன்னணி நடிப்பில் மற்றும் தயாரிப்பில் ஆகாஷ் திரில்லர் படமாக உருவாகியிருப்பது மார்கன். இந்த படத்திற்கு சென்சார் போர்ட் யு/ ஏ சான்றிதழை கொடுத்துள்ளது.

Maargan: மார்கன் படத்தின் அப்டேட்.. விஜய் ஆண்டனி ரசிகர்கள் ஹேப்பி!

விஜய் ஆண்டனியின் மார்கன்

Published: 

19 Jun 2025 18:39 PM

கோலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, படங்களில் கதாநாயகனாகக் கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவரின் முன்னணி நடிப்பில் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2012ம் ஆண்டு வெளியான நான் (Naan) என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவில் நுழைந்த விஜய் ஆண்டனி. தனது முதல் படத்தின் மூலமாகவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதைத் தொடர்ந்து படங்களில் இசையமைத்துள்ள, மேலும் படங்களில் கதாநாயகனாக நடிக்கவும் ஆரம்பித்தார். அந்த வகையில் இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் மார்கன் (Maargan). இந்த படத்தை பிரபல இயக்குநர் லியோ ஜான் பால் (Leo John Paul) இயக்கியுள்ளார்.

அதிரடி ஆக்ஷ்ன் திரில்லர் கதைக்களத்துடன் கூடிய இப்படத்திற்கும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிதான் இசையமைத்துள்ளார். இந்த மார்கன் படத்தில் விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என மூன்று பணிகளையும் செய்துள்ளார்.

இப்படமானது வரும் 2025, ஜூன் 27ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு சென்சார் போர்ட் யு/ஏ தரச் சான்றிதழை வழங்கியுள்ளது. இது குறித்த அறிவிப்பை நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட மார்கன் படத்தின் எக்ஸ் பதிவு :

மார்கன் படத்தின் கதைக்களம் ;

இந்த திரைப்படமானது அதிரடி ஆக்ஷ்ன் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இயக்குநர் லியோ ஜான் பாலின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில், விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரி துருவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய வில்லனாக விஜய் ஆண்டனியின் சகோதரியின் மகன், அஜய் தேஷன் நடித்துள்ளார்.

இந்த படமானது குற்றம் சார்ந்த திரில்லர் மற்றும் சைன்ஸ் பிக்ஷன் திரைப்படமாகவும் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படமானது ஒரு ஆமையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதையாக இருக்கும் என்றார் விஜய் ஆண்டனியே ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். இந்நிலையில், நிச்சயமாக இப்படம் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஆண்டனியின் புதிய படங்கள் :

நடிகர் விஜய் ஆண்டனி இந்த படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இதில் சில படங்களைத் தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பில் வள்ளி மயில், அக்னி சிறகுகள், காக்கி, சக்தி திருமகன் என அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்கள் தயாராகி வருகிறது.

மேலும் இவர் லாயர் என்ற புதிய படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி மொத்தம் 5 படங்களைத் தனது கைவசத்தில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.