நடிகர் விஜயின் மியூசிக் டேஸ்ட் நல்லா இருக்கும் – விஜய் ஆண்டனி சொன்ன விசயம்

Vijay Antony: இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது நடிகராக வெற்றிநடைப்பெற்று வருகின்றார். இவரது நடிப்பில் தற்போது சக்தி திருமகன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர் விஜய் சேதுபதிபதி விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜயின் மியூசிக் டேஸ்ட் நல்லா இருக்கும் - விஜய் ஆண்டனி சொன்ன விசயம்

விஜய் ஆண்டனி - விஜய்

Published: 

18 Sep 2025 12:47 PM

 IST

கோலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சுக்கிரன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து பலப் படங்களில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாபெறும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் விஜய் ஆண்டனி. மேலும் இவர் தற்போது தொடர்ந்து படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு அவரது படங்களுக்கு ரசிகரக்ளிடையே வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து படங்களில் நாயகனாகவும் இசையமைப்பாளரும் இருந்து வரும் விஜய் ஆண்டனி படங்களை தயாரிக்கவும் செய்கிறார். பெரும்பாலும் தான் நடிக்கும் படங்களை அவரது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாகவே தயாரித்தும் வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக மார்கன் படன் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் தற்போது சக்தி திருமகன் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் நாளை 19-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் விஜயின் இசை ரசனை குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விஜய்க்கு நல்ல இசை ரசனை உள்ளது – விஜய் ஆண்டனி:

அந்தப் பேட்டியில் விஜய் ஆண்டனி பேசியபோது விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் இசையமைத்த அனுபவம் குறித்து பேசினார். அதில் வேட்டைகாரன் படத்தில் இசையமைக்கும் போது பாடகி சுஜித்ராவை கரிகாலன் காலப்போல பாடலுக்கு பரிந்துறைத்தது நடிகர் விஜய் தான் என்று தெரிவித்தார். இசையில் அவரது பரிந்துறைகள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று விஜய் ஆண்டனி அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… நெட்ஃபிலிக்ஸில் இருந்து திடீரென நீக்கப்பட்ட அஜித்தின் குட் பேட் அக்லி படம் – என்ன காரணம் தெரியுமா?

இணையத்தில் கவனம் பெறும் விஜய் ஆண்டனியின் பேட்டி:

Also Read… Rajinikanth : கதை.. இயக்குநர்.. கேரக்டர்.. கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிப்பது குறித்து பேசிய ரஜினிகாந்த்!