Nooru Saami: விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ‘அம்மா அம்மாதான்’ பாடல் வெளியீடு!
Amma Amma Dhaan Song : கோலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் சசி. இவரின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் ஸ்வாசிகாவின் நடிப்பில் சிறப்பாக தயாராகியுள்ள படம்தான் நூறு சாமி. இப்படத்திலிருந்து அம்மா அம்மாதான் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அம்மா அம்மாதான் பாடல்
இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜய் ஆண்டனி (Vijay Antony) . இவரின் நடிப்பில் இறுதியாக சக்தி திருமகன் (sakthi Thirumagan) என்ற படமானது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில், இவரின் நடிப்பில், முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ள திரைப்படம்தான் நூறு சாமி (Noou Saami). இதை விஜய் ஆண்டனி தயாரிக்க, இயக்குநர் சசி (Director Sasi) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் (Pichaikkaran) என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த கூட்டணியானது இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளது.
இப்படத்தில் விஜய் ஆண்டனி லீட் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாகவும் படத்தின் கதாநாயகியாகவும் ஸ்வாசிகா (Swasika) நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ள நிலையில், ஏற்கனவே “மாய கனவோ” என்ற பாடல் வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது. இப்படத்தின் இரண்டாவது பாடல், “அம்மா அம்மாதான்” (Amma Amma Dhaan ) என பாடல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தனுஷின் வாழ்க்கையிலே முதல் முறை.. கர திரைப்படம் செய்திருக்கும் புது சாதனை.. என்ன தெரியுமா?
நூறு சாமி திரைப்படத்தின் அம்மா அம்மாதான் பாடல் குறித்த எக்ஸ் பதிவு:
The wholesome beauty and endless love of every mother 🤍 #AmmaAmmaDhaan | #AmmaAmmega
The second single from #Noorusami / #VandaDevullu is out now!
🔗 Tamil: https://t.co/XzqGJhQcqL
🔗 Telugu: https://t.co/Jnu1AlWEWG🎙️ @sreekanth1810
✒️ @Lyricist_Mohan… pic.twitter.com/7suCynmy1X— vijayantony (@vijayantony) May 1, 2026
இந்த நூறு சாமி திரைப்படமானது கிராமத்தில் தனது பிள்ளைகளை வளர்ப்பதற்காக, ஒரு தாய் நடத்தும் பாசப்போராட்டம் பற்றிய கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி மற்றும் ஸ்வாசிகாவுடன் நடிகர்கள் லிஜோமோல் ஜோஸ், அஜய் திஷன் மற்றும் காவ்யா அனில் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது எமோஷனலான கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துவருகிறது.
இதையும் படிங்க: வண்டார்கொடி என் வண்ணக்கிளி என் உள்ளாரா உன்னால காயம் – சூர்யாவின் நடிப்பில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ரெட்ரோ ஒரு ஆண்டு நிறைவடைந்தது
மேலும் சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனால் இப்படம் எப்போது வெளியாகும் என கேள்விகள் எழும்பிவந்த நிலையில், இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் இப்படம் 2026 மே மாதத்தில் வெளியாகும் என முன்பு நேர்காணல் ஒன்றில் விஜய் ஆண்டனி தெரிவித்திருந்த. அந்த வகையில் இன்னும் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.