விஜய், அஜித், சிவகார்த்திகேயன் யாருடன் மீண்டும் படம் நடிப்பீங்க? வித்யுத் ஜம்வால் சொன்ன விசயம்

Actor Vidyut Jammwal: இந்தி சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் வில்லனாக வலம் வருகிறார் நடிகர் வித்யுத் ஜம்வால். இந்த நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் வித்யுத் ஜம்வால் பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விஜய், அஜித், சிவகார்த்திகேயன் யாருடன் மீண்டும் படம் நடிப்பீங்க? வித்யுத் ஜம்வால் சொன்ன விசயம்

வித்யுத் ஜம்வால்

Published: 

20 Oct 2025 11:30 AM

 IST

தெலுங்கு சினிமாவில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான சக்தி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் வித்யுத் ஜம்வால் (Actor Vidyut Jammwal). தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். குறிப்பாக இந்தி சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் நடிகர் வித்யுத் ஜம்வால். இவர் கடந்த 2012-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான பில்லா 2 படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நடிகராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற துப்பாக்கி படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்து இருந்தார் நடிகர் வித்யுத் ஜம்வால்.

இந்த துப்பாக்கி படத்திற்கு பிறகே நடிகர் வித்யுத் ஜம்வாலை தமிழ் ரசிகர்கள் நன்கு அடையாளம் கண்டுகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் ரசிகர்கள் நடிகர் வித்யுத் ஜம்வாலை துப்பாக்கி வில்லன் என்றே அடையாளப் படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் வித்யுத் ஜம்வால் 2014-ம் ஆண்டு நடிகர் சூர்யா உடன் இணைந்து அஞ்சான் படத்தில் நடித்து இருந்தார். இதில் சூர்யாவின் நண்பனாக ரசிகர்களுக்கு பிடிக்கும் கதாப்பாத்திரத்தில் வித்யுத் ஜம்வால் நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ள்ளார் வித்யுத் ஜம்வால். அதன்படி இறுதியாக நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த மதராஸி படத்தில் வில்லனாக நடித்து இருந்தார் வித்யுத் ஜம்வால். இதில் சிவகார்த்திகேயனை விட வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

என் மதிப்பிற்குறிய அஜித்துடன் மீண்டும் நடிக்க ஆசை:

இந்த நிலையில் நடிகர் வித்யுத் ஜம்வால் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக்கொண்டார். அதில் தமிழ் சினிமாவில் தற்போது முன்னிலை வகிக்கும் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடித்துவிட்டீர்கள். இதில் யாருடன் மீண்டும் நடிக்க விரும்புவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த வித்யுத் ஜம்வால் என் மதிப்பிற்குறிய அஜித் சாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் பில்லா 2 படத்தின் நேரத்தில் எனக்கு துறை சார்ந்த பல விசயங்களை சொல்லிக் கொடுத்தார். அவர் எனக்கு ஒரு மெண்டார். அவருடன் இணைந்து நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்று வித்யுத் ஜம்வால் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… கல்யாணை மாலை புது புது அர்த்தங்களை விட ப்ரோ கோட் படத்தில் தான் அதிக ஃபேமஸ் – எஸ்.ஜே.சூர்யா!

இணையத்தில் வைரலாகும் வித்யுத் ஜம்வால் பேச்சு:

Also Read… வீட்டுதலப் பதவியை சரியாக செய்யாத துஷார்… சரமாரியக கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி