Vetrimaaran : குடும்பத்துடன் 50வது பிறந்தநாளை கொண்டாடிய வெற்றிமாறன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Vetrimaarans 50th Birthday Celebration : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருந்து வருபவர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் தற்போது எஸ்.டி.ஆர். படமானது உருவாகிவருகிறது. 2025ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதியில் வெற்றிமாறன் 50வது பிறந்தநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Vetrimaaran : குடும்பத்துடன் 50வது பிறந்தநாளை கொண்டாடிய வெற்றிமாறன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

வெற்றிமாறனின் குடும்பம்

Published: 

05 Sep 2025 19:57 PM

 IST

இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் விடுதலை பார்ட் 2 (Viduthalai Part 2). இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது வெற்றிமாறன், நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் எஸ்டிஆர்.49 (STR49) என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ, வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டிருந்தது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

நேற்று 2025 செப்டம்பர் 4ம் தேதியில் இயக்குநர் வெற்றிமாறன் 50-வது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். இந்த பிறந்தநாளை மிகவும் சிம்பிளாக தனது குழந்தைகள் மற்றும் மனைவியுடன் கொண்டாடியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்ற டோவினோ தாமஸ்.. அட இந்த படத்துக்காகவா?

குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய வெற்றிமாறனின் வைரலாகும் பதிவு

வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசனின் STR49 படம்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிக்கவுள்ள படம்தான் STR49. இந்த படத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க, மற்ற நடிகர்களை பற்றிய அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இந்த படமானது தனுஷின் வடசென்னை படத்தின் பின்னணியில் உருவாகவுள்ளதாம். இதுகுறித்து வெற்றிமாறன் நேர்காணலில் கூறியிருந்தார். சிலம்பரசன் முதலில் STR49 என்ற படத்தில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் ஒப்பந்தமாகியிருந்தார்.

இதையும் படிங்க : தளபதி vs இளைய தளபதி.. தளபதி விஜய்யின் தி கோட் வெளியாகி ஓராண்டு நிறைவு!

இந்த படமானது சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் வெற்றிமாறனுக்கு சூர்யாவுடன் படம் இயக்க தயாராகியிருந்த நிலையில் அதுவும் சில சிக்கலின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இவர்களின் படங்கள் இரண்டுமே தள்ளிப்போன நிலையில், இவர்கள் இருவரும் இணைந்த கூட்டணி படம்தான் STR49 என அறிவிக்கப்பட்டுள்ளது.

STR49 படத்தின் ப்ரோமோ வீடியோ பதிவு :

STR49 படத்தின் ஷூட்டிங் அப்டேட் :

இந்த படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகளானது மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இதை தொடர்நது இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025 , அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதல் ஆரம்பமாகவுள்ளதாம். மேலும் இப்படத்தின் அடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவும் என கூறப்படுகிறது.