Venkat Prabhu : சிவகார்த்திகேயனுடன் புதிய படத்தில் இணையும் வெங்கட் பிரபு!

Sivakarthikeyan And Venkat Prabhu : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர்தான் வெங்கட் பிரபு. இவர் இறுதியாகத் தளபதி விஜய்யின் தி கோட் திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில், அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் புதிய படத்தில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இதை இயக்குநர் வெங்கட் பிரபு உறுதிப்படுத்தியுள்ளார்.

Venkat Prabhu : சிவகார்த்திகேயனுடன் புதிய படத்தில் இணையும் வெங்கட் பிரபு!

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு

Published: 

13 Jul 2025 21:56 PM

இயக்குநர் வெங்கட் பிரபு (Venkat Prabhu), தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட இயக்குநர்களில் ஒருவர். இவர் நடிகர்கள் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar) வரை பிரபலங்களை வைத்து திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் தி கோட் (The GOAT). இந்த படத்தில் தளபதி விஜய் கதாநாயகன் நடித்து அசத்தியிருந்தார். இந்த படமானது எதிர்பார்த்ததை விடவும் சுமார் ரூ. 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயனுடன் (Sivakarthikeyan) புதிய திரைப்படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில், இந்த் தகவலை இயக்குநர் வெங்கட் பிரபு உறுதி செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தலைவன் தலைவி (Thalaivan Thalaivii) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு, தனது அடுத்த திரைப்படம் சிவகார்த்திகேயனுடன்தான் என உறுதி செய்துள்ளார்.

இந்த தகவலானது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. தளபதி விஜய்யின் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த நிலையில், அதை அடுத்ததக்க வெங்கட் பிரபுவின் புதிய படத்திலும் அவர் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விஜய் சேதுபதியின் தெலுங்கு படத்தில் வில்லியாக நடிக்கும் தபு?

வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயனின் கூட்டணி பட ஷூட்டிங் :

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி மற்றும் பராசக்தி போன்ற படங்களின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை அடுத்ததாக இயக்குநர் விநாயக் சந்திரசேகரின் இயக்கத்தில் SK24 படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது . இதில் நடிகர் மோகன்லாலும் நடிக்கவிருக்கும் நிலையில், அவரின் கால்ஷீட் தாமதமான காரணத்தால் இப்படத்தின் ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அல்லு அர்ஜுன்- அட்லீ படம் – நெகடிவ் ரோலில் நடிக்கும் ராஷ்மிகா?

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸை மற்றும் பராசக்தி படத்தின் ஷூட்டிங்கை அடுத்தாக, வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், வரும் 2025, அக்டோபர் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகர்கிகேயனின் ரிலீசிற்கு காத்திருக்கும் மதராஸி படம் :

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் மதராஸி. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இந்த படத்தின் மற்ற காட்சிகள் ஷூட்டிங் நிறைவான நிலையில், சண்டைக்காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்ததாக இவர் நடித்துவரும் பராசக்தி படம் வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.