மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு தனுஷ்கோடினு பெயர் வைக்க இதுதான் காரணம் – இயக்குநர் வெங்கட் பிரபு ஓபன் டாக்!

Director Venkat Prabhu: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் முன்னதாக வெளியான மாநாடு படத்தில் வில்லனாக நடித்த நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு தனுஷ்கோடி என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு தனுஷ்கோடினு பெயர் வைக்க இதுதான் காரணம் - இயக்குநர் வெங்கட் பிரபு ஓபன் டாக்!

தனுஷ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா

Published: 

09 Sep 2025 07:30 AM

 IST

இயக்குநர் வெங்கட் பிரபு (Director Venkat Prabhu) இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மாநாடு. சினிமாவில் நீண்ட நாட்களாக வெற்றியைப் பெற முடியாவில் இருந்த நடிகர் சிம்புவிற்கு மாபெரும் கம்பேக்காக இந்தப் படம் அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கடந்த 25-ம் தேதி நவம்பர் மாதம் 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் நடிகர் சிம்பு உடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன், சுப்பு பஞ்சு, அஞ்சேனா கீர்த்தி, உதயா, அரவிந்த் ஆகாஷ், டேனியல் அன்னி போப், ஸ்டண்ட் சில்வா, படவா கோபி, சிங்கப்பூர் பாலா, அருண் மோகன், கிருபா, மஹத் ராகவேந்திரா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தை வி ஹவுஸ் புரடெக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார். மேலும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் பேசியது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

வில்லன்னா ஒரு பவர்ஃபுல் பெயர் இருக்கனும்:

இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியபோது இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் மாநாடு படத்தில் சிம்புவிற்கு வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு தனுஷ்கோடி என்று பெயர் வைக்க காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு வில்லன்னா ஒரு பவர்ஃபுல் பெயர் இருக்கனும்ல.

தனுஷ் சிம்பு இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால் அவர்கள் ரசிகர்களுக்கு இடையே ஒரு போட்டி இருக்கு. அதுக்காகதான் சிம்புவிற்கு வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யாவிற்கு தனுஷ்கோடினு பெயர் வைத்தேன் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

Also Read… கல்லூரி படத்தில் தமன்னாவை நாயகியாக தேர்வு செய்தது இப்படிதான் – இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஓபன் டாக்!

இணையத்தில் வைரலாகும் வெங்கட் பிரபுவின் பேச்சு:

Also Read… ‘தாங்க மாட்டீங்க’ மம்முட்டியின் ஃபேமஸ் டயலாக்கை பாராட்டி தள்ளிய இயக்குநர்!

Related Stories
Sirai Movie: மிகவும் உண்மையானதாகவும் அசலாகவும் உணர்ந்தேன்.. சிறை படத்திற்கு விமர்சனம் கொடுத்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து!
அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் ரீ-ரிலீஸாகும் மங்காத்தா.. வைரலாகும் பதிவு!
உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான டொவினோ தாமஸின் நரிவேட்டை படம் – எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
2026ல் எதிர்பார்ப்புகளுடன் வெளியாக காத்திருக்கும் தமிழ் நடிகர்களின் படங்கள்?
2025-ம் ஆண்டில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த தென்னிந்திய மொழிப் படங்கள்
Radhika Apte: ஷூட்டிங் தளத்தில் நான் மட்டும்தான் பெண்.. என்னிடம் அதை செய்த சொன்னது மிகவும் அசௌகரியமாக இருந்தது- ராதிகா ஆப்தே ஓபன் டாக்!
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்
வருடத்திற்கு 6 முதல் 12 லட்சம் சம்பளம் வாங்குகிறீர்களா?
ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் தகுதிப்பெற்ற இந்தியத் திரைப்படம்!!
உலக அளவில் 100 சிறந்த இனிப்புகளில் இடம்பெற்ற 2 இந்திய இனிப்புகள் - எது தெரியுமா?