Vadam: விமலின் கிராமத்து கதைக்களம் பெஸ்ட்டா? ஒஸ்ட்டா? வடம் திரைப்படத்தில் விமர்சனங்கள் இதோ!

Vadam Movie Review: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர் விமல். இவரின் நடிப்பில் முழு கிராமத்து ஆக்ஷன் மற்றும் மஞ்சுவிரட்டு கதையை மையமாக கொண்டு, இன்று 2026 மார்ச் 6ம் தேதியில் வெளியாகியுள்ள படம்தான் வடம். இந்த திரைபடம் பெஸ்ட்டா? ஒஸ்ட்டா என்பதை பற்றி பார்க்கலாம்.

Vadam: விமலின் கிராமத்து கதைக்களம் பெஸ்ட்டா? ஒஸ்ட்டா? வடம் திரைப்படத்தில் விமர்சனங்கள் இதோ!

வடம் திரைப்பட விமர்சனம்

Updated On: 

06 Mar 2026 15:45 PM

 IST

நடிகர் விமல் (Vemal) நீண்ட நாட்களுக்கு பின், வடம் (Vadam) என்னும் முழுமையான கிராமத்து ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் கேந்திரன் முனியசாமி (Kenthiran Muniasami) இயக்க, பாலமுருகன், ராஜசேகர் மற்றும் வீரசேகர் போன்றோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் விமல் ஆக்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், அவருக்கு இணையான வேடத்தில் நடிகர் நட்டி சுப்பிரமணியமும் (Natty Subramaniam) இணைந்து நடித்துள்ளார். இதில் விமலுக்கு ஜோடியாக நடிகை சங்கீதா கல்யாண் நடித்துள்ள நிலையில், மிகவும் பிரம்மாண்ட தயாராகியிருந்தது. மேலும் இதில் நடிகர்கள் முனிஷ் காந்த், பாலா சரவணன், தீபா சங்கர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்திருக்கும் நிலையில், சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் முற்றிலும் கிராமத்து ஆக்ஷன் மற்றும் வீரம் தொடர்பான கதைக்களத்தில் திறக்கியிருந்த நிலையில், இன்று 2026 மார்ச் 6ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பூஜைகளுடன் தொடங்கியது ரவி மோகன் இயக்கும் அன் ஆர்டினரி மேன் பட ஷூட்டிங்!

விமலின் வடம் திரைப்படத்தின் விமர்சனம் :

இந்த வடம் திரைப்படமானது ஆரம்பமான சில நொடிகளில், பார்ப்பவர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கிற இயக்குநர். அந்த அளவிற்கு சுவாரஸ்யமாக தொடங்குகிறது. மேலும் ஜாமினில் வெளியவரும் விமலை கொலை செய்வதற்காக ஒரு கும்பல் காத்திருக்க, மற்றொருபுறம் ஒரு முதியவர் விமலை கொலை செய்ய ஆட்களை திரட்டுகிறார். மேலும் விமலுடன் இருக்கும் நபரே அவருக்கு குழி பறிக்கிறார். அப்படி என்ன செய்தார் விமல் என்பதை தேடியே முதல் காட்சி தொடங்குகிறது. அப்படி என்ன விமல் செய்தார் என்பதே அடுத்தடுத்த நகர்விற்கு கொண்டு செல்கிறது.

வடம் படம் குறித்து டி.இமான் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

வடம் படத்தில் நடிகர்களின் நடிப்பு எப்படி இருக்கு:

நடிகர் விமலின் நடிப்பில் பல ஆண்டுகள் இடைவெளிக்கு பின் முழு ஆக்ஷன் கிராமத்து கதியில் வடம் தயாராகியுள்ளது. இதில் கம்பீரமான வேடத்தில் அவர் நடித்துள்ளார். மேலும் இதில் மஞ்சுவிரட்டிற்காக காளைகளுக்கு பயிற்சியளிக்கும் அவரின் காட்சிகள் மிரட்டலாகவே இருக்கிறது. இதில் நடிகை சங்கீதா கல்யாண வெறும் நடிகையாக மட்டுமில்லாமல், அவரை வைத்தும் இப்படத்தின் கதை நகர்கிறது. மேலும் இதில் பாலா சரவணனின் காமெடி, முனிஷ் காந்தின் ஆக்ஷ்ன் நடிப்பு என சொல்லிக்கொண்டே போகலாம்.

இதையும் படிங்க: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தை பார்க்கும் மறு ஆய்வுக்குழு .. சென்சார் எப்போது கிடைக்கும்?

வடம் திரைப்படத்தை திரையரங்குகள் சென்று பார்க்கலாமா?:

இந்த வடம் திரைப்படமானது முக்கியமாக மஞ்சுவிரட்டு விளையாட்டை மையமாக கொண்டுள்ளது. மேலும் மதுரை மனம் சார்ந்த கதையில் தயாராகியுள்ளது. மேலும் இதில் பல பழிவாங்கல் மற்றும் ரத்தம் இருக்கும் காட்சிகள் படத்திற்கு கொஞ்சம் நெகடிவ் ரசனையை கொடுக்கிறது. ஒரு முழுமையான் பக்கா கிராமத்து ஆக்ஷன் படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் நிச்சயம் வடம் திரைப்படத்தை திரையரங்குகள் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
Janhvi Kapoor: எனது ஃபேஸ் க்ளோவிங்-காக இதை மறக்காமல் செய்வேன்.. ஜான்வி கபூர் சொன்ன பியூட்டி சீக்ரட்!
Ashwath Marimuthu: STR51-ல் சந்தானம் இருக்காரு.. படத்தின் மைய கருத்து இதுதான் – அஷ்வத் மாரிமுத்து கொடுத்த அப்டேட்!
Texla: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் டெக்ஸ்லா படத்தில் நடிக்கும் ஜெய்.. பூஜைகளுடன் தொடங்கிய ஷூட்டிங்!
Jana Nayagan: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தை பார்க்கும் மறு ஆய்வுக்குழு .. சென்சார் எப்போது கிடைக்கும்?
Arjun Das: பணம் கொடுக்கும் நவீன மிஷின்.. வெளியானது அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ பட டைட்டில் டீசர்!
Sai Abhayankkar: ஒரு பாட்டுதான் போட்டு காமிச்சேன்.. அட்லீ அண்ணா சொன்னதும் ஆடிபோய்ட்டேன் – சாய் அபயங்கர்!
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி