12 ஆண்டுகளை நிறைவு செய்தது வடிவேலுவின் தெனாலிராமன் படம்

12 Years Of Tenaliraman Movie: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வந்த நடிகர் வடிவேலு கதையின் நயகானக நடித்தப் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில் இவர் நாயகனாக நடித்து வெளியான தெனாலிராமன் படம் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

12 ஆண்டுகளை நிறைவு செய்தது வடிவேலுவின் தெனாலிராமன் படம்

தெனாலிராமன்

Published: 

18 Apr 2026 20:48 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தெனாலி ராமன். ஹிஸ்டாரிகல் காமெடி பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் யுவராஜ் தயாளன் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் வடிவேலு நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் மீனாட்சி தீட்சித், ராதா ரவி, மனோபாலா, ராஜேஷ், சந்தான பாரதி, போஸ் வெங்கட், ஜோ மல்லூரி, ஜி.எம்.குமார், பாலா சிங், நமோ நாராயணா, கிருஷ்ணமூர்த்தி, செல்லதுரை, கிங் காங், முத்துகாளை, ஜார்ஜ் மரியன், பெசன்ட் ரவி, பாவா லட்சுமணன், நெல்லை சிவா, ஜாங்கிரி மதுமிதா, தேவதர்ஷினி, அமிர்தா ஐயர், குழந்தை நேஹா, சண்முகராஜன், மன்சூர் அலி கான், கத்தரிக்கோல் மனோகர், ஹல்வா வாசு, பெய் கிருஷ்ணன், நிக்சன் செங், விவியென் செங், வில்சன் என்ஜி, மின்னலே ரவி, சுமதி என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தை போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

12 ஆண்டுகளை நிறைவு செய்தது வடிவேலுவின் தெனாலிராமன் படம்:

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பிறகு காமெடி நடிகராக உருவெடுத்தவர் நடிகர் வடிவேலு. ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக நடிகர் வடிவேலு இருந்து வந்தார். எந்த மாதிரியான காமெடி ரெஃபரன்ஸ்களுக்கும் வடிவேலுவின் காமெடியை பயன்படுத்தி வந்தனர். தொடர்ந்து காமெடியனாக நடித்து வந்த நடிகர் வடிவேலு பிறகு கதையின் நாயகனக நடிக்கத் தொடங்கினார். அந்தப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படி நடிகர் வடிவேலு நடிப்பில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தப் படம் தான் தெனாலிராமன். இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Also Read… அன்பு பொழிந்துகொண்டே இருக்கிறது… வசூலில் ரூபாய் 50 கோடியைக் கடந்தது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம்

தெனாலிராமன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Yash: தந்தை – மகன் பழிவாங்கும் கதை.. டாக்ஸிக் படம் இப்படித்தான் இருக்கும் – யாஷ் சொன்ன விஷயம்!

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..