Upendra Rao: நான் ரஜினிகாந்த் சாரின் பக்தன்.. கூலி படத்தில் நடித்ததற்கு ஒருபோதும் வருத்தப்படவில்லை – உபேந்திர ராவ் பேச்சு!
Upendra Rao About Rajinikanth: கன்னட சினிமாவில் திறமையான நடிகர் மற்றும் இயக்குநராக இருப்பவர் உபேந்திர ராவ். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவிலும் படம் வெளியாகியுள்ளது. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அந்த படத்தில் நடித்தது குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.

ரஜினிகாந்த் மற்றும் உபேந்திர ராவ்
தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உபேந்திர ராவ் (Upendra Rao). இவர் பிரபல கன்னட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கன்னட மொழியில் பல படங்களை இயக்கியிருக்கிறார். எந்திரன் படம் வருவதற்கு முன்பே ரோபோவை கொண்டு முதல் படத்தை இயக்கிய இந்திய இயக்குநரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தற்போதுவரை பிரம்மாண்ட படங்கள் தயாராகிவருகிறது. அதில், இவரின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம்தான் 45 தி மூவி (45 The Movie). இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2025 டிசம்பர் 25ம் தேதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது வெளியாகிறது. இதில் உபேந்திர ராவ், சிவராஜ்குமார் (Shivaraj Kumar) மற்றும் ராஜ்.பி ஷெட்டி (Raj B Shetty) உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
அந்த வகையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் உபேந்திர ராவ் கலந்துகொண்டிருந்தார். அதில் அவர் கூலி படத்தில் நடித்த உணர்வு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: இந்திய மாணவர்கள் அனைவரும் பராசக்திதான்.. அவர்களால் எதையும் சாதிக்க முடியும் – சுதா கொங்கரா பேச்சு!
கூலி படத்தில் நடித்தது குறித்து உபேந்திர ராவ் பேசிய விஷயம் :
அந்த நேர்காணலை தொகுப்பாளர், “கூலி படத்தில் உங்ககளின் கதாபாத்திரம் குறைவாகத்தான் வந்தது, அது தொடர்பான விமர்சனங்களை நீங்க என்ன நினைக்கிறீர்கள்?” என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய உபேந்திர ராவ், ” அந்த படமே நான் ரஜினிகாந்த் சாருக்காகத்தான் பண்ணினேன். அவருடன் நடிப்பேன் என கனவு கண்டேன். அந்த கனவே நினைவானதுபோல் அது இருந்தது. நான் ரஜினிகாந்தின் ரசிகன் அல்ல, அவரின் பக்தன். அவரின் நடிப்பிற்கு, அவரின் திறமை மற்றும் அவரின் கருத்துக்கள் எல்லாமே பிடிக்கும்
இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டா- கீர்த்தி சுரேஷின் புது பட கிளிம்ப்ஸ் வெளியானது.. டைட்டில் இதுதானா?
அவரின் எல்லா விஷயமும் எனக்கு பிடிக்கும். தலைவர் என்றால் அவர்தான் தலைவர். அவருடன் சிறு வேடத்தில் என்ன, ஒரு கட்சியில் வந்துபோவதற்கும் நான் தயார். மேலும் கூலி படத்தில் எனக்காக நான் நடித்த கதாபாத்திரத்தை மேலும் டெவெலப் செய்தார்கள். நான் வெறும் அந்த சண்டைக்கு மட்டும் வருவதாகவே இருந்தது. மேலும் அந்த படத்தில் நடித்தது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்” என அவர் அதில் தெரிவித்திருந்தார்.
கூலி படத்தில் நடித்தது குறித்து உபேந்திர ராவ் பேசிய வீடியோ பதிவு:
Bharadwaj: Critisism about your role on #Coolie❓#Uppendra: I did it just for #Rajinikanth sir, I’m devote of him🛐. Earlier it was only one fight for me, later on they developed the character for me🌟. Even if it’s one shot i could have acted♥️pic.twitter.com/rGxPVLqmhg
— AmuthaBharathi (@CinemaWithAB) December 22, 2025
நடிகர் உபேந்திர ராவின் நடிப்பில் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாக காத்திருக்கும் படம்தான் 45 தி மூவி. இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.