இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி யாருனு தெரியுமா? இவர் இன்னும் டாப் நடிகைதான்!
Tamil Celebrity Childhood Photos: தென்னிந்திய சினிமாவில் கதாநாயகிகள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் சினிமாவில் தாண்டுவதே கடினம். அந்த வகையில் 22 வருடத்தை கடந்து சினிமாவில் தற்போதும் லீட் நாயகியாக நடிக்கும் நடிகை தான் இவர். இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி எந்த நடிகைன்னு தெரிகிறதா?. யார் என விவரமாக பார்க்கலாம்.

பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படம்
கோலிவுட் சினிமாவில் (Kollywood Cinema) பிரபல நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகிவருவது வழக்கம். இந்நிலையில் மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இரு சிறுமிகள் இருக்கின்றனர். அதில் இருக்கும் ஒரு சிறுமி தற்போதுவரையிலும் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அந்த நடிகை யாருனு தெரிகிறதா?. ஆரம்பத்தில் மாடலிங் (Modeling) செய்துவந்த இந்த நடிகை, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் கதாநாயகியாக நுழைந்தார். இவர் கடந்த 1999ம் ஆண்டு இயக்குநர் பிரவீன் காந்த் (Praveenkanth) இயக்கிய ஜோடி திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் இவருக்கு நடிப்பின் மீது சுத்தமாகவே ஆர்வமில்லையாம். இவர் மேலும் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் தல அஜித் குமார் (Ajith kumar) வரை பல பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
கடந்த 2025ம் ஆண்டில் இவரின் நடிப்பில் மட்டுமே கிட்டத்தட்ட 4 படங்கள் வெளியாகியிருந்தது. அதில் 2 படங்கள் தோல்வியடைந்தாலும், ஒரு படம் கலவையான விமர்சனம் மற்றும் ஒரு படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. அந்த படத்தில் இவர் அஜித் குமாருடன் நடித்திருந்தார். மேலே இருக்கும் சிறுமி வேறுயாருமில்லை நடிகை திரிஷா கிருஷ்ணன் தான் (Trisha Krishnan).
இதையும் படிங்க: சிம்புவிற்கு முன்னதாக அந்த பிரபல நடிகரை இயக்கும் தேசிங்கு பெரியசாமி – வைரலாகும் தகவல்
நடிகை திரிஷா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு :
நடிகை திரிஷா கிருஷ்ணன் 1983ம் ஆண்டு மே 4 ஆம் தேதியில் பிறந்தார். இவரின் மலையாளியாக இருந்தாலும் இவர் பிறந்தது முதல் வளர்ந்தது வரை சென்னையில்தான். இவருக்கு சிறுவயதிலிருந்து நடிப்பின்மீது பெரிதாக ஆர்வம் இல்லையாம். மாடலிங் மீது இருந்த ஆர்வத்தினால் பல கல்லூரிகள் மற்றும் மாவட்டங்களில் நடக்கும் அழகி போட்டியில் பங்குபெற்றுள்ளார். இவர் மிஸ் சேலம், மிஸ் இந்தியா போன்ற அழகி போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார். இவர் இயக்குனர் பிரவீன் காந்த் இயக்கத்தில் வெளியான ஜோடி என்ற படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக நடித்து சினிமாவை நுழைந்தார்.
இதையும் படிங்க: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் அந்த கேரக்டர் நான் நடிக்க வேண்டியது – கென் கருணாஸ் ஓபன் டாக்
பின் இயக்குநர் அமீர் இயக்கத்தில் 2002ம் ஆண்டில் சூர்யா நடித்திருந்த மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தின் அறிமுகத்திற்கு பின் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் இவருக்கு தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடியாக அமைந்தது விஜய்தான். திரிஷா மற்றும் விஜய் இருவரும் இணைந்து நடித்த படமானது சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த விதத்தில் கடந்த 2025ல் மட்டுமே இவரின் நடிப்பில் 4 படங்கள் வெளியாகியிருந்தது. அதில் குட் பேட் அக்லி என்ற படம் வெற்றிபெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.