Trisha Krishnan: நயன்தாரா எனக்கு போட்டியா? அனைவருக்கு அதை சொல்ல காரணம் இதுதான்- திரிஷா கிருஷ்ணன்!

Trisha Krishnan About Nayanthara: தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் திரிஷா கிருஷ்ணன். இவரின் நடிப்பில் பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் முன்பு ஓர் நேர்காணலில் பேசிய இவர் அவருக்கும், நயன்தாராவுடன் போட்டி என அனைவரும் சொல்ல காரணம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

Trisha Krishnan: நயன்தாரா எனக்கு போட்டியா? அனைவருக்கு அதை சொல்ல காரணம் இதுதான்- திரிஷா கிருஷ்ணன்!

திரிஷா கிருஷ்ணன் மற்றும் நயன்தாரா

Updated On: 

06 Nov 2025 08:30 AM

 IST

நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) தமிழ் சினிமாவில் பிரபல நாயகியாக இருந்துவருகிறார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் தெலுங்கு நடிகர் பிரபாஸ் (Prabhas) வரை பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகை திரிஷாவின் நடிப்பில் மட்டும் இந்த 2025ம் ஆண்டில் கிட்டத்தட்ட 4 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் அஜித் குமாருடன் மட்டும் 2 படங்களில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தனது 40 வயதை கடந்தும் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாகவும், தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் பெரும் நாயகியாகவும் திரிஷா இருந்துவருகிறார். மேலும் இவரின் நடிப்பில் கருப்பு (Karuppu) படமானது உருவாகிவருகிறது.

இதில் சூர்யாவிற்கு (Suriya) ஜோடியாக திரிஷா இணைந்து நடித்துள்ளார். இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போதுவரையிலும் பிரம்மாண்ட படங்களில் கதாநாயகியாகவே திரிஷா நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் முன்னதாக ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அதில் நடிகை நயன்தாராவிற்கும் (Nayanthara), தனக்கும் போட்டி நிலவுவதாக கூறப்படுவதற்கு என்ன காரணம் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மக்கள் செல்வனுடன் புதிய படத்திற்காக இணையும் மணிரத்னம்.. நாயகி இவரா?

நயன்தாரா குறித்து பேசிய நடிகை திரிஷா கிருஷ்ணன் :

அந்த நேர்காணலில் நடிகை திரிஷா கிருஷ்ணன், “பலரும் நயன்தாராவிற்கும், எனக்கும் சினிமாவில் போட்டி நிலவுவதாக கூறுகிறாரக்ள். அதற்கு காரணமாக நான் நினைப்பது என்னவென்றால், நாங்கள் இருவரும் சினிமாவில் ஒரே நேரத்தில்தான் நாயகியாக நடிக்க தொடங்கியிருந்தோம். தொடர்ந்து ஒரே மாதிரியான பிரம்மாண்ட படங்கள் ஒரே மாதிரியான நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறோம். அதன் காரணமாக அனைவரும் எங்களுக்கு இடையே போட்டி நிலவுவதாக கூறுகிறார்கள் என்றும் நினைக்கிறேன். ஆனால் நாங்கள் இருவரும் ஒரு ஆரோக்கியமான உறவில் இருக்கிறோம். தற்போது ஒரு நடிகை மற்ற ஒரு நடிகையுடன் பேசுவதே கிடையாது.

இதையும் படிங்க: டேக் இட் ஈஸி ஊர்வசி பாடல் இப்படித்தான் வந்தது.. நடிகை ஊர்வசி சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

தற்போது ஒரு நான்கு நடிகைகள் ஒன்றாக இணைகிறார்கள், அப்படி எதாவது ஒரு சூழ்நிலை அமைந்தால்தானே அவர்களிடம் பேசுவதற்கு வாய்ப்புகள் இருக்கும். மேலும் நானும்  நயன்தாராவும் விருது வழங்கும் விழா, மற்றும் கும்பலாக நடிகைகள் எல்லாம் இருக்கும்போது ஒருதடவை சந்தித்திருக்கிறோம். அந்த இடத்தில நாங்கள் பேசினால் கூட, படங்களை பற்றி எதுவும் பகிர்ந்துகொள்ளமாட்டோம்” என அந்த நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார்.

திரிஷா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் பதிவு :

நடிகை திரிஷாவின் நடிப்பில் தமிழில் அடுத்தக் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் கருப்பு. இதில் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பின் சூர்யாவுடன் இணைந்து நடித்திருக்கிறார். இப்படம் முழுக்க ஆக்ஷ்ன், நீதி மற்றும் தெய்வீகம் சார்ந்த கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இது 2026ம் ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.