ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி படத்தின் டீசர்

Pallichattambi Movie Official Teaser Out Now: மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பள்ளிச்சட்டம்பி. இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி படத்தின் டீசர்

பள்ளிச்சட்டம்பி

Published: 

23 Mar 2026 12:19 PM

 IST

மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேர்பைப் பெற்று வருகின்றது. இவர் தொடர்ந்து மலையாள சினிமாவில் படங்களில் நடித்து வந்தாலும் இவரது படங்கள் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் இவர் கேமியோ வேடத்தில் நடித்து இருந்தாலும் அடுத்ததாக இரண்டாவது உருவாகும் பாகத்தில் டொவினோ தாமஸ் தன நாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து டொவினோ தாமஸ் நடிக்கும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அதன்படி கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் டொவினோ தாமஸ் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்த 2026-ம் ஆண்டும் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசைக்கட்டிக் காத்திருக்கின்றது. அந்த வரிசையில் முதலாவதாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி உள்ள பள்ளிச்சட்டம்பி படம் ஆகும்.

வெளியானது டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி படத்தின் டீசர்:

டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி உள்ள பள்ளிச்சட்டம்பி படம் வருகின்ற 10-ம் தேதி ஏபரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் டொவினோ தாமஸிற்கு ஜோடியாக நடிகை கயடு லோஹர் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Sara Arjun: ட்ரெண்டிங் கதாநாயகியாக சாரா அர்ஜுன்.. துரந்தர் படத்தில் நடிப்பதற்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… GV Prakash: ஹேப்பி ராஜ் படம் சாதாரண ஃபன் படம் மாதிரி இருக்காது.. இதில் நிறைய மீனிங் இருக்கு – ஜி.வி. பிரகாஷ் குமார் ஓபன் டாக்!

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..