தக் லைஃப் பட விவகாரம்… கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

Thug Life Movie: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தக் லைஃப். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிடவில்லை.

தக் லைஃப் பட விவகாரம்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

கமல் ஹாசன்

Published: 

13 Jun 2025 18:57 PM

கர்நாடகாவில் இயக்குநர் மணிரத்னம் (Director Mani Ratnam) இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் (Actor Kamal Haasan) நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தை வெளியிடமுடியாமல் போனது குறித்து உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசிற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. கர்நாடகாவில் நீதித்துறைக்கு அப்பாற்பட்ட தடையை எதிர்த்து தக் லைஃப் படக்குழு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை 13-ம் தேதி ஜூன் மாதம் 2015-ம் ஆண்டு நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கர்நாடக அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி அந்த நோட்டீஸிற்கு தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர் (உள்துறை) மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோரிடம் விளக்கம் கேட்டுள்ளது.

மேலும் இவர்கள் விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம் வழக்கை வருகின்ற ஜூன் மாதம் 17-ம் தேதி 2025-ம் ஆண்டு மீண்டும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகுமா இல்லையா என்பது தெரியவரும்.

கன்னட மொழி குறித்து கமல் ஹாசன் பேசியது:

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் கமல் ஹாசன் கன்னட மொழி தமிழில் இருந்து பிரிந்து சென்றதுதான் என்று பேசியிருந்தார். கமல் ஹாசனின் இந்த பேச்சு கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் பிரமுகர்கள், கன்னட திரையுலகினர், கன்னட மொழி ஆர்வளர்கள் என பலரும் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கமல் ஹாசன் மன்னிப்பு கோரவில்லை என்றால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகாது என்று மிரட்டல் விடுத்தனர். ஆனால் கமல் ஹாசன் மன்னிப்பு கோராமல் நீதிம்னறத்தை நாடினார். முதலில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தை நாடியபோது அவர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட கூறினார்.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

மேலும் ஒரு மன்னிப்பு கோரினால் முடிந்துபோகும் விசயம் என்றும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தக் லைஃப் படக்குழு கர்நாடகாவில் படத்தை வெளியிடுவதை ஒத்தி வைப்பதாக கூறிவிட்டு உச்ச நீதிமன்றத்தை நாடினர். முதலில் இது உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய வழக்கு என்று கடந்த அமர்வில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்த நிலையில் இந்த அமர்வில் கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.