க்ரைம் ட்ராமா பாணியில் உருவான இந்த ஆர்டிகிள் 15 படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

Article 15 Movie OTT Update : இந்தி சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஆர்ட்டிகள் 15. இந்தப் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியிலும் இந்தப் படத்தை ரசிகர்கள் நல்ல வரவேற்பைப் கொடுத்து வருகின்றனர்.

க்ரைம் ட்ராமா பாணியில் உருவான இந்த ஆர்டிகிள் 15 படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

ஆர்டிகிள் 15

Updated On: 

16 Dec 2025 10:22 AM

 IST

இந்தி சினிமாவில் கடந்த 28-ம் தேதி ஜூன் மாதம் 2019-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஆர்டிகிள் 15. இந்தப் படத்தை இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கி இருதார். மேலும் இந்தப் படத்திற்கு கௌரவ் சோலங்கி மற்றும் அனுபவ் சின்ஹா ஆகியோர் இணைந்து இந்தப் படத்திற்கு திரைக்கதையை எழுதி இருந்தனர். இந்தப் படத்தில் நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா, சயானி குப்தா, குமுத் மிஸ்ரா, நாசர், மனோஜ் பஹ்வா, இஷா தல்வார், ஆகாஷ் தபாதே, வீன் ஹர்ஷ், முகமது ஜீஷான் அய்யூப், ரோஞ்சினி சக்ரவர்த்தி, சும்புல் துக்கீர், சுஷில் பாண்டே, ஆஷிஷ் வர்மா, சுப்ரஜ்யோதி பாரத், சிகா வால்மீகி, இஷா வர்மா, சுசி, ஆலிம் நக்வி, நவல் சுக்லா, கபில் தில்ஹாரி, வருண் தம்தா, நூர் அகமது துபா, ஸ்ரேயா அவஸ்தி, சிவம் சிங், இச்சா சங்கர், தாரிக் இக்பால், உதய் வீர் சிங் யாதவ், விவேக் யாதவ், ஆர்.டி.சிங் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர்.

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி இருந்த இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்ச்னா ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பனாரஸ் மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பாக அனுபவ் சின்ஹா படத்தை தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர்கள் அனுராக் சைகியா, பியூஷ் சங்கர், டெவின் பார்க்கர், செஞ்சி சங்கர் ஆகியோர் இணைந்து இசையமைத்து இருந்தனர்.

Also Read… தியேட்டரில் வெற்றிநடைபோடும் களம் காவல் படம்… எவ்வளவு வசூலித்தது தெரியுமா?

ஆர்டிகிள் 15 படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

உத்ரபிரதேசத்தில் இரண்டு தலித் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இவர்களின் உடல்களை போஸ்ட்மார்டம் செய்த போது அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்படது தெரிகிறது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்கவரும் ஆயுஷ்மான் குரானா இந்த வழக்கை விசாரிக்கையில் அந்த மக்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை தெரிந்துகொள்கிறார். இறுதியில் அந்த பெண்களை யார் கொலை செய்தார்கள் என்பதை ஆயுஷ்மான் குரானா கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் தற்போது பார்க்கலாம்.

Also Read… படப்பிடிப்பை முடித்தது சூர்யா 46 படக்குழு… வைரலாகும் போட்டோஸ்

உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்
மனப் பயிற்சிகள் பல வழிகளில் நன்மை பயக்கும்.. வியக்கு வைக்கும் ஆய்வுகள்
7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வாயில் கவ்விச்சென்ற புலி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் பாதை