சிவகார்த்திகேயனை அடுத்து இயக்க உள்ளது இந்த இயக்குநரா? வைரலாகும் தகவல்

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்தடுத்துப் படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாக உள்ள படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சிவகார்த்திகேயனை அடுத்து இயக்க உள்ளது இந்த இயக்குநரா? வைரலாகும் தகவல்

சிவகார்த்திகேயன்

Published: 

07 Apr 2026 16:10 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. இந்தப் படம் கலவையான விமர்சனத்தையேப் பெற்றது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் படம் 100 கோடிக்கு அதிகமாக வசூலித்ததாக தெரிவித்து இருந்தது. ஆனால் படத்தில் வெற்றி இல்லை என்றும் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேட்டியில் தெரிவித்து இருந்தது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் தோல்வியின் காரணமாகவே படங்களின் வசூலில் ஷேர் கேட்பதை விட்டுவிட்டு சம்பளம் பெரும் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் சேயோன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி உள்ளார். இவர் முன்னதாக தாய் கிழவி என்ற படத்தை எழுதி இயக்கி இருந்தார். அறிமுக இயக்குநராக இவரது இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சேயோன் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிவகார்த்திகேயனை அடுத்து இயக்க உள்ளது இந்த இயக்குநரா?

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தற்போது ‘D56’ படத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், அவர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை இயக்கக்கூடும் என்று பேசப்படுகிறது. மேலும், இந்தப் படத்தை ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த கூட்டணி அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read… Leader Movie: லெஜெண்ட் சரவணனின் லீடர் படத்தின் 3 நாட்கள் வசூல் இத்தனை கோடியா?- படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அரசன் படத்தில் இணைந்த நடிகர் கென் கருணாஸ்… வைரலாகும் தகவல்

Follow Us
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?
சிவபெருமானின் அவதாரம் - 100க்கும் மேற்பட்ட பெண்களை வன்கொடுமை செய்த கேப்டன் பாபா
ஈரானில் அமெரிக்க போர் விமானம் மீது தாக்குதல்
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்