நவம்பர் 21-ம் தேதி வெளியாகும் தீயவர் குலை நடுங்க படம் – அப்டேட் இதோ
Theeyavar Kulai Nadunga : நடிகர் அர்ஜுன் சார்ஜா நாயகனாக நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ள படம் தீயவர் குலை நடுங்க. இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியீட்டிற்காக காத்திருந்தது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தீயவர் குலை நடுங்க
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன் சார்ஜா (Actor Arjun Sarja). இவர் கன்னட சினிமாவின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தமிழ் சினிமாவில் இவர் நாயகனாக நடித்தப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஆக்ஷன் படங்கள் பிடித்தவர்களுக்கு நிச்சயமாக நடிகர் அர்ஜுன் தான் பிடித்த நடிகராக இருப்பார். ஆம் தமிழ் சினிமாவில் அதிக அளவில் ஆக்ஷன் படங்களில் நடித்தவர் நடிகர் அர்ஜுன். அது மட்டும் இன்றி தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே தேசப் பக்தியை வளர்த்தப் பலப் படங்களில் நடிகர் அர்ஜுன் தான் நாயகனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வந்த நடிகர் அர்ஜுன் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடிக்கத் தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக இவர் நடித்தப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் வில்லனாக மட்டும் இன்றி படத்தின் நாயகனாகவும் மாறிமாறி நடித்து வருகிறார். இது மட்டும் இன்றி இயக்குநர் பணியையும் தொடர்ந்து செய்து வருகிறார் நடிகர் அர்ஜுன். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் நாயகனாக நடித்துள்ள தீயவர் குலை நடுங்க படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
நவம்பர் 21-ம் தேதி வெளியாகும் தீயவர் குலை நடுங்க படம்:
இயக்குநர் தினேஷ் லக்ஷ்மனன் எழுதி இயக்கி உள்ள படம் தீயவர் குலை நடுங்க. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் நாயகனாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு. Npks, ராம் குமார், வேலராம மூர்த்தி, தங்கதுரை, பேபி அனிகா, குறும்புக்காரர், ராகுல், பிரியதர்ஷினி, சையத், பத்மன் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மாதம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது படம் வருகின்ற 21-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… க்ரைம் த்ரில்லர் பிடிக்கும்னா அஞ்சாம் பாத்திரா படத்தை மிஸ் செய்யாதீர்கள்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Thrilled to share that our intense thriller #TheeyavarKulaiNadunga is releasing worldwide on Nov 21! 🔥
Can’t wait for you all to experience it in theatres 🎥@akarjunofficial @off_dir_Dinesh @BA_THE_MUSIC @gsartsoffl #GArulkumar @logu_npks @praveenraja0505 #AbhiramiVenkat… pic.twitter.com/EsE88GNFBJ
— aishwarya rajesh (@aishu_dil) November 5, 2025
Also Read… ஆடியன்ஸ்கு கோவம் வருது… பிக்பாஸில் திவ்யாவிடம் சண்டைக்கு நிக்கும் துஷார் – வைரலாகும் வீடியோ