சினிமாவில் புது அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன் – வைரலாகும் தகவல்

Pradeep Ranganathan: கோலிவுட் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக கலக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள டியூட் படம் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில் இன்று படத்தில் இருந்து 3-வது சிங்கிள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் புது அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன் - வைரலாகும் தகவல்

டியூட் படம்

Published: 

04 Oct 2025 13:34 PM

 IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganadhan) இயக்கத்தில் வெளியான கோமாளி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து படத்தில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து அவரே இயக்கி நாயகனாக அறிமுகம் ஆன லவ் டுடே படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அதன்படி இந்த ஆண்டின் தொடக்கத்தில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கிய படம் டிராகன். இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இருந்தார். ஏஜிஎஸ் எண்டரெய்ன்மெண்ட் தயாரித்த இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள டியூட் என இரண்டு படங்களில் அடுத்தடுத்து நாயகனாக நடித்துள்ளார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். அதன்படி இந்த இரண்டு படங்களும் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதில் எந்தப் படம் வெற்றியடையும் என்பது பொறுத்து இருந்துதான் பார்க்க முடியும்.

பாடகராக அறிமுகம் ஆகும் பிரதீப் ரங்கநாதன்:

தமிழ் சினிமாவில் நாயகன்களே தொடர்ந்து தங்களது படங்களில் பாடல்களைப் பாடுவது தற்போது வழக்கமாகி உள்ளது. அந்த வரிசையில் தற்போது பிரதீப் ரங்கநாதனும் இணைந்துள்ளார். அதன்படி தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டியூட் படத்தின் மூன்றாவது சிங்கிள் வீடியோ இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் இந்த மூன்றாவது பாடலை நடிகர் பிரதீப் ரங்கநாதனே பாடியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பான அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read… இது ராட்சசன் இல்லை.. இது ஆர்யன் – வெளியானது விஷ்ணு விஷால் பட டீசர்!

டியூட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ரன்பீர் கபூர் – சாய் பல்லவியின் ராமாயணா படத்தின் புது அப்டேட் இதோ