ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கில் வெளியானது விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர்

Viswanath and Sons Movie Original Soundtrak Teaser Viral On Social Media: நடிகர் சூர்யா நாயகனாக நடித்து தற்போது மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கில் வெளியானது விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

Published: 

19 Mar 2026 16:03 PM

 IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவர் தெலுங்கு சினிமாவில் படங்களை இயக்கி வந்தாலும் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் முன்னணி நாயகன்களாக உள்ளவர்களை வைத்து படம் இயக்கி வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகரக்ளிடையே கவனத்தை ஈர்த்தார் வெங்கி அட்லூரி. இந்தப் படத்தில் தான் முதன்முறையாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உடன் கூட்டணி வைத்தார் வெங்கி அட்லூரி. மேலும் இந்தப் படத்திற்காக ஜிவி பிரகாஷ் குமார் தேசிய விருதை வென்றதும் குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான படம் லக்கி பாஸ்கர். இந்தப் படத்தில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திலும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைப்பாளராக பணியாற்றினார். இது இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக கூட்டணி வைத்தனர். இந்தப் படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி தனது தற்போதைய இயக்கத்தில் உருவாகி வரும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்காகவும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உடன் கூட்டணி வைத்தார். இது அவர்கள் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கில் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ:

இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ரிலீஸ் தேதியை லாக் செய்தது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு – வைரலாகும் தகவல்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Dhurandhar 2 Review: துரந்தர் 2 படம் எப்படி இருக்கிறது? சொதப்பலா? சூப்பரா? இதோ முழு விமர்சனம்!

Follow Us
Related Stories
நான் பாத்து வியந்தது எல்லாமே கமல் சார் படங்கள்தான் – நடிகர் ஆசிஃப் அலி!
ஜெய்ஹிந்த் படத்தின் ஷூட்டிங்கில் கவுண்டமணி பன்ன சேட்டை… கலகலப்பாக பேசிய அர்ஜுன் – வைரலாகும் வீடியோ
இயக்குநர் வெற்றிமாறன் சொன்ன அந்த ஒரு வார்த்தைதான் நான் இந்த இடத்தில் இருக்க காரணம் – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஓபன் டாக்
மூன்றாவது முறையாக இணையும் வெற்றிக் கூட்டணி… இயக்குநர் வி.இசட். துரை இயக்கத்தில் நடிக்கும் சுந்தர் சி
ஜெயிலர் 2 படத்தின் இன்டர்வல் ப்ளாக் வேற லெவலில் இருக்கும் – நடிகை மிர்ணா ஓபன் டாக்
அஜித் குமாரின் 64-வது படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இல்லையா? வைரலாகும் தகவல்
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்