ரீ ரிலீஸாகும் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த லவ் ஸ்டோரி… எப்போது தெரியுமா?
Love Story Movie Re Release Update: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நாக சைத்தான். இவருடன் நடிகை சாய் பல்லவி இணைந்து நடித்து சூப்பர் ஹிட் அடித்தப் படம் லவ் ஸ்டோரி. இந்தப் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

லவ் ஸ்டோரி
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் நாகர்ஜுனா. இவரது மூத்த மகன் தான் நடிகர் நாக சைத்தன்யா. இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் நாக சைத்தன்யா நடிப்பில் முன்னதாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த லவ் ஸ்டோரி படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி நடிகர் நாக சைத்தன்யா நாயகனாக நடித்து கடந்த 24-ம் தேதி செப்டம்பர் மாதம் 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் லவ் ஸ்டோரி இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சேகர் கம்முலா எழுதி இயக்கி இருந்தார்.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜுனா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராஜீவ் கனகலா, தேவயானி, ஈஸ்வரி ராவ், உத்தேஜ், ஆனந்த சக்ரபாணி, கங்கவ்வா, ராணா டகுபதி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
திரையரங்குகளில் ரீ ரிலீஸாகும் லவ் ஸ்டோரி படம்:
இந்தப் படத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சைத்தன்யா உயர் வகுப்பைச் சேர்ந்த சாய் பல்லவி இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சொந்த ஊரில் யாருக்கும் தெரியாமல் காதலித்து வந்த நிலையில் சிட்டியில் ஒன்றாக இருக்கின்ற்னர். இந்த நிலையில் இவர்களின் காதல் சாய் பல்லவியின் வீட்டிற்கு தெரிந்து சைத்தன்யாவை குடும்பத்துடன் கொலை செய்ய திட்டமிடுகின்றனர். இந்த சதிகளை மீறி அவர்கள் எப்படி இந்த காதலில் ஜெயித்தார்கள் என்பது குறித்து இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்தப் படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Jana Nayagan: தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட இறுதித் தீர்ப்பு எப்போது இருக்கும்?
நாக சைத்தன்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A film very close to my heart #LoveStory is Re-releasing on February 14th. Excited for this , looking forward to celebrating in theaters with you all again . #MagicalBlockBusterLovestory
@sekharkammula @Sai_Pallavi92 @SVCLLP @AsianSuniel #PusukurRamMohanRao#BharatNarang… pic.twitter.com/20uv8KrXiH— chaitanya akkineni (@chay_akkineni) January 22, 2026
Also Read… சிம்புக்கு நோ.. சிவகார்த்திகேயனுக்கு எஸ்.. SK-வுடன் புது படத்தில் இணையும் பார்க்கிங் பட இயக்குநர்?