ஹேப்பி ராஜ் படத்திலிருந்து இன்று மாலை வெளியாகிறது இரண்டாவது சிங்கிள்

Thuru Thuru secong single from Happy Raj movie out today: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நாயகன் என பிசியாக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் உருவாகி உள்ள ஹேப்பி ராஜ் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாக உள்ளது.

ஹேப்பி ராஜ் படத்திலிருந்து இன்று மாலை வெளியாகிறது இரண்டாவது சிங்கிள்

ஹேப்பி ராஜ்

Published: 

10 Mar 2026 13:28 PM

 IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். தொடர்ந்து இசையமைப்பாளராக பல ஹிட் படங்களை கொடுத்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இசையமைப்பாளராக மக்களிடையே வரவேற்பைப் பெற்ற ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாகவும் வரவேற்பைப் பெற்று வருகிறார். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் அடுத்தடுத்தப் படங்கள் கடந்த 2025-ம் ஆண்டில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது போல அவர் நாயகனாக நடித்து வெளியான படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தென்னிந்திய சினிமாவில் பிசியான இசையமைப்பாளரகா வலம் வரும் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ஹேப்பி ராஜ்.

இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இயக்குநர் மரிய ராஜ இளஞ்செழியன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ள நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான பியாண்ட் தி பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஜெய்வர்தா தயாரித்து உள்ளார். படம் வருகின்ற 27-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இன்று மாலை 5 மணிக்கு ஹேப்பி ராஜ் படத்திலிருந்து வெளியாகிறது துரு துரு சிங்கிள் வீடியோ:

ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் இந்த ஹேப்பி ராஜ் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து முன்னதாக முதல் சிங்கிள் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் வீடியோ இன்று வெளியாகிறது. அதன்படி இன்று மாலை 5 மணிக்கு துரு துரு என்ற பாடலின் சிங்கிள் வீடியோ வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… அஜித் குமாரின் AK 64 படத்தை தயாரிப்பது அந்த பிரபல நிறுவனமா? வைரலாகும் தகவல்

ஹேப்பி ராஜ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… யூத் படத்தை நான்தான் இயக்கவேண்டும் என முடிவெடுக்க வைத்ததே அவர்தான் – கென் கருணாஸ் பேச்சு!

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..