நூறு சாமி படத்திலிருந்து வெளியானது அம்மா அம்மா தான் பாடலின் புரோமோ வீடியோ

Amma Amma Dhaan Song Promo Video Out Now: நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி வருகிறது நூறு சாமி படம். இந்தப் படத்தில் இருந்து அம்மா அம்மா தான் பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டு உள்ளது.

நூறு சாமி படத்திலிருந்து வெளியானது அம்மா அம்மா தான் பாடலின் புரோமோ வீடியோ

அம்மா அம்மா தான்

Published: 

30 Apr 2026 13:37 PM

 IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. இவரது இசையில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான வார்த்தைகளை மையமாக வைத்து இவர் இசையமைத்த படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. புரியாத வார்த்தைகளை பயன்படுத்துவதில் விஜய் ஆண்டனி கைதேர்ந்தவர் என்றும் அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவர் நாயகனாக நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் கதை தேர்வு செய்வதில் நடிகர் விஜய் ஆண்டனி சிறந்து விளங்குவதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தமிழ் சினிமாவில் தற்போது பிசியான நாயகனாக வலம் வருகிறார் விஜய் ஆண்டனி. இவர் நடிக்கும் பெரும்பாலான படங்களை அவரது தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரித்து  வருகின்றது. அதே போல இந்த நூறு சாமி படத்தையும் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பு நிறுவனமே தயாரித்து வருகின்றது.

வெளியானது அம்மா அம்மா தான் பாடலின் புரோமோ வீடியோ:

அதன்படி இந்த நூறு சாமி படத்தை இயக்குநர் சசி எழுதி இயக்கி உள்ளார். இவர் முன்னதாக விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்து உள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்ஹ்டில் இருந்து அம்மா அம்மா தான் என்ற பாடல் நாளை வெளியாக உள்ளது. இந்தப் பாடலின் புரோமோ வீடியோவை தற்போது படக்குழு வெளியாகி உள்ளது.

Also Read… நான் இப்படி ஒரு இடத்தில் நிற்பேன் என்று நினைக்கவே இல்லை – 29 பட விழாவில் எமோஷ்னலாக பேசிய நடிகர் விது

நூறு சாமி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நான் பிறந்ததில் இருந்தே தொடங்கியது இந்த யுத்தம் – அடுத்த முடிச்சை அவிழ்க்க வருகிறது த்ரிஷம் 3!

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..