தல இங்க! முண்டம் எங்க? விஜய் சேதுபதியின் காட்டான் படத்திலிருந்து வெளியானது நியூ போஸ்டர்

Vijay Sethupathis Kaattaan Movie New Poster Out Now: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் காட்டான். இந்தப் படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

தல இங்க! முண்டம் எங்க? விஜய் சேதுபதியின் காட்டான் படத்திலிருந்து வெளியானது நியூ போஸ்டர்

காட்டான்

Published: 

05 Mar 2026 13:54 PM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி வில்லனாகவும், சிறப்புக் கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியானது. இதில் தமிழ் சினிமாவில் இரண்டு படங்கள் மற்றும் மலையாள சினிமாவில் ஒரு படத்திலும் நடித்து இருந்தார். இதில் மலையாள சினிமாவில் வெளியான படத்தில் கேமியோ வேடத்தில் நடித்து இருந்தார். மேலும் தமிழ் சினிமாவில் வெளியாகி இருந்த இரண்டு படங்கலும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் காந்தி டால்க்ஸ். இந்தப் படத்தில் வசங்கள் எதுவும் இல்லாமல் மௌனப் படமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் இல்லாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ள படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதியின் காட்டான் படத்திலிருந்து வெளியானது நியூ போஸ்டர்:

அதன்படி இந்த காட்டான் படத்தை இயக்குநர் மணிகண்டன் எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக இந்த காட்டான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படம் நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வருகின்ற 27-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் தல இங்க! முண்டம் எங்க? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு இருந்தது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… 10 ஆண்டுகளைக் கடந்த பிச்சைக்காரன் படம்… விஜய் ஆண்டனி வெளியிட்ட நெகிச்சிப் பதிவு!

ஜியோ ஹாட்ஸ்டார் தமிழ் ஓடிடி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… காமெடி நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் நியாபகம் இருக்கா? அவரது மகன் பற்றி தெரியுமா?

Follow Us
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி