இந்த புகைப்படத்தில் இருக்கும் சகோதரர்கள் யாருனு தெரியுமா? இவர்கள் கூட்டணியில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது!

Tamil Celebrities Childhood Photo: தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரையிலும் பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இருந்து வருகின்றனர். அந்த விதத்தில் இப்புகைப்படத்தில் உள்ள இரு சிறுவாய்கள் யார் என தெரியுமா?. இவர்கள் இருவரின் கூட்டணியில் பல ஹிட் படங்கள் வெளியாகியிருக்கிறது. அவர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் சகோதரர்கள் யாருனு தெரியுமா? இவர்கள் கூட்டணியில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது!

தமிழ் பிரபலங்களின் குழந்தைப் பருவ புகைப்படங்கள்

Published: 

03 Feb 2026 08:36 AM

 IST

சினிமாவை பொறுத்தவரையிலும் பல்வேறு நட்சத்திரங்கள் இருந்துவருகின்றனர். அவர்களின் அடையாளம் தெரியாத சிறுவயது மற்றும் குழந்தைப் பருவ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருவது உண்டு. அந்த விதத்தில் மேலே இருக்கும் போட்டோவில் உள்ள இரு சிறுவர்கள் யார் தெரியுமா?. இதில் இருக்கும் இருவருமே உடன்பிறந்த சகோதரர்கள். இவர்கள் கூட்டணியிலும் தமிழ் சினிமாவில் (Tamil Cinema) பல படங்கள் வெளியாகியுள்ளது. அதில் குட்டியாக இருக்கும் சிறுவன் சினிமாவில் கதாநாயகனாக நடித்துவருகிறார். மேலும் உயரமாக இருக்கும் சிறுவன் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். தெலுங்கில் வெளியான படத்தை தமிழில் ரீமேக் செய்து தனது தம்பியை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.

இதில் குள்ளமாக இருக்கும் சிறுவனின் முதல் படமே அவருக்கு சூப்பர் ஹிட் வரவேற்பை தமிழ் மக்களிடையே கொடுத்திருந்தது. பின் அந்த படத்தின் பெயரையே மக்கள் இந்த நடிகருக்கு வைத்திருந்தனர். இந்த இரு சகோதரர்களும் வேறுயாருமில்லை, இயக்குநர் மோகன் ராஜா (Mohan Raja) மற்றும் நடிகர் ரவி மோகன்தான் (Ravi Mohan).

இதையும் படிங்க: சியான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.. துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் அப்டேட்!

நடிகர் ரவி மோகனின் இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகர் ரவி மோகன் மற்றும் மோகன் ராஜா :

நடிகர் ரவி மோகன் ஆரம்பத்தில் ரசிகர்களால் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டுவந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் இவர் கடந்த 2044ம் ஆண்டு இறுதியிலிருந்து தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். இவர் தமிழில் 2004 ஆண்டில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தின் மூலமாகவே இவருக்கு ஜெயம் ரவி என பெயர் வந்தது. இந்த படத்தை அவரின் சகோதரரான இயக்குநர் மோகன் ராஜா இயக்கியிருந்தார். இயக்குநர் மோகன் ராஜா 2001ல் வெளியான ஹனுமான் ஜங்க்ஷன் என்ற படத்தின் மூலமாகவே இயக்குநராக அறிமுகமானார்.

இதையும் படிங்க: எழுத்தாளர் தமிழ் பிரபா உடன் இணையும் ஹரிஷ் கல்யாண் – வைரலாகும் தகவல்

இப்படத்தை அடுத்ததாக தெலுங்கு மற்றும் தமிழ் படங்களை தொடர்ந்து இயக்கிவந்தார். நடிகர் ரவி மோகன் மற்றும் மோகன் ராஜா கூட்டணியில் ஜெயம், எம்.குமரன் சன் ஆப் மகாலெட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி மற்றும் தனி ஒருவன் போன்ற படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர்கள் கூட்டணியில் தனி ஒருவன் 2 படமும் உருவாகவுள்ளது. அந்த வகையில் சினிமாவில் சிறப்புவாய்ந்த சகோதரர்களாக இவர்கள் இருவரும் இருந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.15 லட்சம் செலவுசெய்து வளரப்பு நாயை ஆஸ்திரேலியா கொண்டு சென்ற இந்திய தம்பதி
அசாமில் 80 மீட்டர் பாலத்தை உருவாக்கிய அசாம் இளைஞர்
மரணத்திற்குப் பின்னும் வாழ்க்கை உண்டா? மரணத்தை வெல்ல நிபுணர்கள் முயற்சி
உருவாகிறது ரஜினிகாந்தின் பயோபிக்.. இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா?.. வந்தது குட்நியூஸ்!!