இன்று மாலை வெளியாகிறது மூக்குத்தி அம்மன் 2 படத்தின் கிளிம்ஸ் வீடியோ

Mookuthi Amman 2 Movie Glimpse : நடிகை நயன்தாரா நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று மாலை வெளியாகிறது மூக்குத்தி அம்மன் 2 படத்தின் கிளிம்ஸ் வீடியோ

மூக்குத்தி அம்மன் 2

Published: 

30 Dec 2025 14:45 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2020-ம் ஆண்டு 14-ம் தேதி நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான படம் மூக்குந்தி அம்மன். ஃபேண்டசி காமெடி பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி இருந்தார், மேலும் இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை நயன்தாரா நாயகியாக நடித்து இருந்தார்.இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஊர்வசி, ஸ்ம்ருதி வெங்கட், மது மைலாங்கொடி, அபி நட்சத்திரம், மௌலி, டிஎஸ்ஆர் சீனிவாசன் அஜய் கோஷ், எல்.ஆர்.ஈஸ்வரி, மயில்சாமி, இந்துஜா ரவிச்சந்திரன், யாஷிகா ஆனந்த் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தினை பிரபல தயரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்து இருந்தார்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இன்று மாலை வெளியாகிறது மூக்குத்தி அம்மன் 2 படத்தின் கிளிம்ஸ்:

முதல் பாகத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜி இயக்காத காரணமாக சுந்தர் சி இந்தப் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா கடவுளாக நடிக்கும் நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். தொடர்ந்து இந்தப் படத்தின் கிளிம்ஸ் வீடியோ இன்று மாலை வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Also Read… என்னைக்குமே பொங்கலுக்கு தனிப்படம் வந்ததே இல்லை… 2 படங்கள் வெளியாகுவது சரிதான்- பராசத்தி பட தயாரிப்பாளர் பேச்சு

மூக்குத்தி அம்மன் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மீண்டும் இணைந்த ஆம்பள பட கூட்டணி.. படக்குழு வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

Related Stories
ஃபேமிலி எண்டெர்டெய்ன்மெண்ட் படத்தை பார்க்கணுமா? அப்போ இந்த கேஷு ஈ வீடிண்டே நாதன் படத்தை பாருங்க!
நடிகை பிரதியுஷாவின் காதலருக்கு 2 ஆண்டுகள் சிறை…. 25 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு – என்ன நடந்தது?
Pocket Novel Movie: விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்.. தொடங்கியது பாக்கெட் நாவல் பட ஷூட்டிங்!
Mamitha Baiju: ‘அந்த விஷயத்தில் விஜய் சாரை அடிச்சிக்கமுடியாது’ – மேடையில் வெளிப்படையாக பேசிய மமிதா பைஜூ!
Mrunal Thakur: ‘அதைக் கேட்பதில் தனக்கு ஒருபோதும் வெட்கம் இருந்ததில்லை’ – மிருணாள் தாக்கூர் பேச்சு!
ரஜினிகாந்தின் இறுதிப் படத்தை தயாரிக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்? வைரலாகும் தகவல்
திரைப்பட விருது விழா.. சூர்யாவுக்கு மாற்றி கொடுக்கப்பட்ட ரஹ்மானின் விருது.. மேடையில் சிரிப்பலை
மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’.. வெளியீட்டு தேதி & முக்கிய அப்டேட்!!
வானில் வெடித்த விமான எஞ்சின்.. பயத்தில் உறைந்த பயணிகள்.. ஷாக் சம்பவம்!!
தங்கத்துக்கு நிகரான மதிப்பை தரும் அரிய மரம்.. அதிசயம்!!