ரீ ரிலீஸாகும் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் மூன்று முகம் – எப்போது தெரியுமா?
Moondru Mugam Movie: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் முன்னதாக இவரது நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த மூன்று முகம் படம் மீண்டும் ரீ ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி 1982-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மூன்று முகம். இந்தப் படத்தை இயக்குநர் ஜன நாதன் இயக்கி இருந்த நிலையில் படத்திற்கு திரைக்கதையை கனகா சண்முகன், பி.எல்.சுந்தர் ராஜன், தமிழழகன், ராதா வீரண்ணன் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதி இருந்தனர். இந்தப் படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் ராதிகா, சத்யராஜ், செந்தாமரை, தேங்காய் சீனிவாசன், சில்க் ஸ்மிதா, ராஜ்யலட்சுமி, கமலா கமேஷ், சங்கிலி முருகன், வி.கோபாலகிருஷ்ணன், பூர்ணம் விஸ்வநாதன், டெல்லி கணேஷ், சி.ஆர்.பார்த்திபன், சாருஹாசன், என்னடா கண்ணையா, காந்திமதி, லூஸ் மோகன், இடிச்சபுலி செல்வராஜ், ஹாஜா ஷெரீப் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படம் திரையாங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகும் படங்கள் எல்லாம் சுமார் இரண்டு வாரங்களைக் கடந்தாலே படம் வெற்றியடைந்ததாக கருதப்படும் நிலையில் இந்த மூன்று முகம் படம் திரையரங்குகளில் 250 நாட்களைக் கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரீ ரிலீஸாகும் மூன்று முகம் படம்:
தமிழ் சினிமாவில் கடந்த 12-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படையப்பா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இது தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.




Also Read…. பராசக்தி படத்திலிருந்து இன்று மாலை வெளியாகிறது ‘வேர்ல்ட் ஆஃப் பராசக்தி’ வீடியோ
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக வெளியாகி 43 வருடங்களைக் கடந்த சூப்பர் ஹிட் படமான மூன்று முகம் படத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்ட்டமிட்டு வருகின்றது. இதுகுறித்த தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பரவி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read…. சூர்யா 46 படம் இப்படிதான் உருவானது… இயக்குநர் வெங்கி அட்லூரி சொன்ன விசயம்