அதர்வாவின் பிறந்த நாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடும் இதயம் முரளி படக்குழு
Atharvaa Murali Birthday Special Video Viral On Social Media: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் அதர்வா முரளி. இவர் இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நிலையில் இதயம் முரளி படக்குழு வீடியோ வெளியிட்டு கொண்டாடி வருகின்றது.

இதயம் முரளி
தமிழ் சினிமாவில் மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் தான் நடிகர் அதர்வா முரளி. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு நாயகனாக அறிமுகம் ஆனார். அதன்படி பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் அடுத்தடுத்த வாய்ப்புகள் அதர்வாவை தேடி வந்தது. தொடர்ந்து வித்யாசமான கதைகளை தேர்வு செய்து நடிகர் அதர்வா முரளி நடித்து வந்ததால் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக நடிகர் அதர்வா முரளி நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இறுதியாக நடிகர் அதர்வா முரளி நடிப்பில் பராசக்தி படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்தாலும் படத்தில வரது தம்பியாக அதர்வா முரளி முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்கள் அதர்வா முரளி நடிப்பில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதர்வாவின் பிறந்த நாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடும் படக்குழு:
இந்த நிலையில் நடிகர் அதர்வா முரளி இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரது நடிப்பில் உருவாகி வரும் படங்கள் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது இதயம் முரளி படக்குழு நடிகர் அதர்வாவிற்கு வீடியோ வெளியிட்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… காதலுக்கு பள்ளிக்கூடம் கட்ட போறேன் நானடி… 22 ஆண்டுகளைக் கடந்தது பேரழகன் படம்!
இதயம் முரளி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Wishing our ever charming and beloved Idhaya @Atharvaamurali a very Happy Birthday♥️🎂 pic.twitter.com/OHwNODXTHI
— DawnPictures (@DawnPicturesOff) May 7, 2026
Also Read… மாமன் பட இயக்குநர் நடிக்கும் வாரண்ட் வெப் சீரிஸ் – அறிமுக டீசரை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் குமார்