முடிவடையுமா ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை? –  இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது வழக்கு

Jana Nayagan Movie Censor Case Update: தமிழ் சினிமா மட்டும் இன்றி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிம ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த படம் ஜன நாயகன். இந்தப் படம் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

முடிவடையுமா ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை? -  இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது வழக்கு

ஜன நாயகன்

Published: 

20 Jan 2026 10:14 AM

 IST

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். சினிமாவில் கெரியரின் உச்சத்தில் இருக்கும் போது எந்த ஒரு நடிகரும் துணிச்சலாக எடுக்காத ஒரு முடிவை நடிகர் விஜய் எடுத்தார். அதன்படி நடிகர் விஜய் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது அதனை அப்படியே விட்டுவிட்டு அரசியலில் களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபோது விஜயின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். தன்னை சினிமாவில் உயர்த்திய மக்களுக்காக தான் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் கலம் இறங்கியதாக பல இடங்களில் நடிகர் விஜய் தெரிவித்து இருந்தார். மேலும் இந்த முடிவை நடிகர் விஜய் எடுத்த போது அவரது 69-வது படத்தில் கமிட்டாகி இருந்தார். இந்தப் படம் தான் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் இறுதிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிய பிறகு இறுதியாக ஜன நாயகன் படம் தான் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்ட காரணத்தால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் படம் கடந்த 9-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்பு சென்சார் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்காத காரணத்தால் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது.

இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது ஜனநாயகன் சென்சார் வழக்கு:

இந்த நிலையில் ஜன நாயகன் படக்குழு சென்சார் சான்றிதழ் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தி மேல்முறையீடு செய்த போது அந்த வழக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இன்று படத்தின் சென்சார் பிரச்சனை முடிவடையும் என்று படக்குழுவினரும் ரசிகர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Also Read… காதலர் தினத்தை குறிவைக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு… வைரலாகும் ரிலீஸ் தகவல்

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் வைல்கார்ட் போட்டியாளராக வந்து கோப்பையை தட்டிச் சென்றவர்கள் யார் யார்? லிஸ்ட் இதோ

ஆதார் அட்டைதாரர்களே.. இந்தத் தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்.. அரசு எச்சரிக்கை!!
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!
"பாட்டி.. மொத்த சமோசாவும் காலி".. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..